செவ்வாய், 22 ஜூலை, 2014

மாலை

மாலை

அருகிருப்பது என்றாயிற்று,
மலைகளை அவர்கள் குடைந்த போது

வெடிச்சத்தம்
அதிர்வுகளுள் முடங்க
வெகு நேரமாயிற்று

கண்காணா நீர்க்கசிவுகளுக்குச்
சஞ்சலமான  ஒலி இருந்து வந்தது

விரலிடுக்கில் ஒட்டியிருந்த
கொஞ்சம் மேகத்துடன்
தரையிறங்கினேன்

குகைகளும்  கீழிறங்கியிருந்தன
குகைகளுள் சிறுசிறு விளக்குவாரிசைகளுடன்
ஊர்.

    'சுருதி' இதழ்  மே-1996
  (அழகப்பா அரசு கலை& அறிவியல் கல்லூரி   மாணவர்களின் இதழ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீ எனும் தற்சுட்டு: அபி கவிதைகள் – இசை (தமிழினி)

நேர்காணல் ஒன்றில், “உங்கள் கவிதைகளை அணுகுவதற்கு எந்த விதமான தயாரிப்புகள் தேவை? “ என்று கேட்கப்படுகிறது அபியிடம். அதற்கு அவர், “வேண்டுமா...