ஞாயிறு, 22 மார்ச், 2015

நிசப்தமும் மௌனமும்நெடுங்கால நிசப்தம்
படீரென வெடித்துச் சிதறி யது

கிளைகளில் உறங்கிய
புழுதின்னிப் பறவைகள்
அலறியடித்து
அகாத வெளிகளில்
பறந்தோடின
தத்தம் வறட்டு வார்த்தைகளை
அலகுகளால் கிழித்துக் கொண்டே.
0

விடிவு
நினைவுகளையும்
நிறமழித்தது

'நெடுங்காலம்' கடுகாகிக்
காணாமல் போயிற்று

சுருதியின்
பரந்து விரிந்து விரவி...
இல்லதிருக்கும் இருப்பு
புலப்பட்டது
மங்களாக

சுருதி தோய்ந்து
வானும் நிரமற்று
ஆழ்ந்தது மெத்தென

பூமியில்
ஒலிகலின் உட்பரிவு
பால்பிடித்திருந்தது
வெண்பச்சையாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீ எனும் தற்சுட்டு: அபி கவிதைகள் – இசை (தமிழினி)

நேர்காணல் ஒன்றில், “உங்கள் கவிதைகளை அணுகுவதற்கு எந்த விதமான தயாரிப்புகள் தேவை? “ என்று கேட்கப்படுகிறது அபியிடம். அதற்கு அவர், “வேண்டுமா...