வியாழன், 6 நவம்பர், 2014
 கவிஞர் மீரா தனது நூலின் முன்னுரையில் ....

கவிஞர் அபி குறித்து ......

"அப்துல் ரகுமான் என் வலது கண். சிற்பி என் இடது கண். இன்குலாப் என் இடதுகை. காமராசன் என் வலதுகை. பாலாவும், மேத்தாவும் என் இதயத்தின் இரு பக்கம். வைரமுத்து, தமிழன்பன், சிதம்பரநாதன், முருகுசுந்தரம், அபி, தேனரசன், புவியரசு, தமிழ்நாடன், தணிகைச்செல்வன், இந்திரன், காசி ஆனந்தன், நவகவி, கல்யாண்ஜி, கலாப்ரியா, கந்தர்வன், அறிவுமதி, வெ. சேஷாசலம், க.வை. பழனிச்சாமி, நாஞ்சில் ஆரிது. வைகை வாணன், அப்துல்காதர், இக்பால், பஞ்சு, ரவி சுப்ரமணியன், வசந்தகுமார் - இவர்கள் எல்லாம் என் அங்கங்களைப் போல என்னுள் நிறைந்திருக்கிறார்கள். எனவே நான் நான் அல்ல. நான் எல்லோரும் கலந்த அவதாரம். ஆமாம். நான் செத்தாலும் வாழ்வேன்." 
-----கவிஞர் மீரா  .


"லா.சா.ரா" வோடு பேசிக் கொண்டிருந்தேன் .

                                               --அபி --
                                                            (லா. சா. ராவுக்கு அஞ்சலி)

                                                        { தீராநதி டிசம்பர் 2007 -ல் வெளி வந்த கட்டுரை }

அவர் பேசிக் கொண்டிருந்தார்.

இரவு இரண்டரை மணியாயிற்று. பேச்சு நீடித்து நின்று கொண்டிருந்தது. உறங்கும் பம்பரம் போல, ஒரே புள்ளியில், விரிவு, விளக்கம் அலசல் இல்லை. முடிவை நோக்கிய துளி அடையாளமுமின்றிப் பேச்சு நின்று விட்டது. அப்போதுதான் அவர் பார்வையில் பட்டார். உயர்த்திய கைகள் கீழிறங்கி முகம் சற்றுத் தாழ்ந்து கனத்து இருந்தது. அவர் பேச்சு, அவரை அவரது ஆழத்தில் செருகியிருக்க வேண்டும். அங்கு நிலவிய மௌனத்தை நாங்கள் (என்னுடன் என் நண்பர்கள் பாலசுந்தரம், பாலகிருஷ்ணன்) கலைக்கவில்லை அவர் பேசிக்கொண்டிருந்த போதுகூட அதே மௌனம்தான் எனக்கு அனுபவமாயிருந்தது. அப்போது எனக்குப் புரிந்தது. அவர் எழுத்தில் உள்ள உரத்த குரல்களும் ஆயிரம் உணர்ச்சி அறை கூவல்களும் மௌனத்தின் மாற்று வடிவங்களே என்பது இப்படித்தான் நான் லா. ச. ராவை முதன்முதலாகச் சந்தித்தேன். 1975 இல், தென்காசியில் அவர் இருந்த வீட்டு மாடியில் என் முனைவர் பட்ட ஆய்வுக்காக அந்தச் சந்திப்பு அதற்கப்புறம் பலமுறை பல இடங்களில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அவரே அதிகம் பேசுவார் கூடுதலாக நகைச்சுவை பேச ஆரம்பிக்கும் போது அவர் இருப்பார். தொடர்ச்சியில் சற்றுப் பின்வாங்கிக் கொள்வார். உணர்ச்சித் தகிப்பில் கொஞ்சம் கம்மிப்போய்விடும். குரலில் அவர் எண்ணங்கள் தம் வார்த்தைகளைக் கொத்திக் கொண்டு பறந்து திரியும். அடித்தல் திருத்தல் செய்ய அவ்வப்போது அவர் முன்வந்து குறுக்கிடுவது தெரியும். அது ஒரு அனுபவம் எழுத்து எப்படியோ பேச்சு அவரிடம் ‘இஸங்கள்’ பற்றிக் குறிப்பிட்டேன்.

லா. ச. ரா. இலக்கணம் அறியாதவர்(நல்ல வேளையாக) இலக்கணம் அற்றவர் (சரியாகச் சொன்னால்) இலக்கணம் என்று நினைக்கப்படுகிற இஸங்களைச் சொல்கிறேன். புதிது புதிதாக இஸங்கள் வரும்போதெல்லாம் இலக்கிய உலகம் பரபரப்படைகிறது. பொருந்திக்கொள்ளத் துடிக்கிறது. அவர் எழுத்தில் சில இஸங்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டியபோது அவர் பொருட்படுத்தவேயில்லை. தோன்றி மூத்துக் கழியும் இஸங்கள் பற்றி அவர் கவனம் கொள்ளவில்லை. அவருடைய தன்னிச்சைத் தன்மையே அவரை வழிநடத்தியது. இஸங்கள் மக்கிப்போகின்றன. இலக்கியங்கள் வாழ்கின்றன. இதைப் புரிந்து கொள்ளாமல் இன்றைய இஸங்களுடன் சம்பந்தப்படுத்தி அவரை விமர்சிப்போர் உண்டு. ‘சின்ன வயதில்’ அவருடைய நடையின் கவர்ச்சியில் பிரபித்துக் கிடந்ததாகவும் பிறகு சலிப்பேற்பட்டு விலகிவிட்டதாகவும் இந்த மாதிரியில், தமது ‘வளர்ச்சி’ பற்றிய பெருமிதத்தைச் சொல்வோர் சிலர் உண்டு.

கவர்ச்சியும் மயக்கமும் வெளிப்பார்வை பார்ப்பவர்களுத்தான் லா.ச.ராவின் சரியான வாசகன் நடையழகுகளை, படிமங்களை, சங்கேதங்களை, சைகைகளை, நனவோடை பிரமிப்புகளைத் தாண்டி உள்நுழையும் பக்குவமும் பொறுமையும் கொண்டவன்.

உள்ளிழுக்கப் பட்டவன் முதலில் தன் திகைப்பைப் புரிந்து கொள்வான். தான் நிற்க வைக்கப்பட்டிருக்கின்ற இடமற்ற இடத்தின் தட்ப வெப்பம் உணர்வான். தன் கையறுநிலை உணர்வான். இன்னும் கனத்தைத் தாங்கும் சாத்தியம் கூட இருக்கிறது எனக் காண்பான். லா. ச. ராவின் எழுத்துக்குள் எந்தப் பிரிவினைக்கும் இடந்தராத மனிதாபிமானம் முழு அமைதியில் பனிபோல் நிலவும் அன்பு, சொல்லைத் துறந்து தன் சுயத்தில் இலங்கும் ஆன்மீகம் இவற்றைப் பார்ப்பான். தனக்குள் தண்ணெண்ற ஒரு சாந்தம் உணர்வான். இந்த சாத்தியங்களெல்லாம் உண்மை என்பதைத் தான் லா. ச. ரா. 50 ஆண்டுகளாகச் சொல்லிவந்தார். 

ஒருநாள், பேசிக்கொண்டிருந்தவர் இடையே நிறுத்தி விட்டு ‘இதெல்லாம் உங்களுக்குப் பிரமிப்பாக இருக்கிறதா?’ என்றார். ‘இல்லை’ என்றேன். ‘எனக்குள்ளிருக்கிற அமைதியை நான் அடைகிறேன்’ என்றேன். லா. ச.ரா அப்படி கேட்டது உரையாடலிலும் கடிதத்திலும் வாசகர்கள் பலரிடமிருந்து அவருக்கு வந்து குவிந்த எதிர்வினைகளை ஒட்டியதாயிருக்கலாம். என் பதில், அவர் என்னைத் தகுதியான ஒரு வாசகன் எனக் கண்டுகொள்ள உதவியதாக இருக்கலாம். உண்மையில் வாசகனிடம் அவரது எதிர்பார்ப்பு வாசகன்  அவர் வழியாக அவரைத் தாண்டிப் போக வேண்டும் என்பது தான். அவரது அனுபவ உலகம், அவரவர் அனுபவ உலகுகளைச் சீண்டிக் கிளர்விக்க வேண்டும் என்பதுதான். எல்லா நல்ல எழுத்தும் வா, வந்து என்னுள் நுழைந்து தாண்டிப்போ’ என்று அகம் திறக்கின்றன. வெளிவேடிக்கை பார்த்து நின்று விலகிப் போவதை அவை விரும்புவதில்லை.

வாழ்வின் எதார்த்தத்தை இலக்கியம் பிரதிபலிக்க வேண்டும்; பாத்திரங்களும் நிகழ்வுகளும் நம்பகமானவையாக இருக்க வேண்டும். இது இலக்கியத்தில் சற்று  நீண்டகாலச் செல்வாக்குடைய கோட்பாடு. லாச. ராவின்  கதைகளில் இந்த வரையறைகள் மீறப்பட்டிருக்கின்றன. பழங்கதைப் பாணியும் இயற்கை இகந்த தன்மைகளும் தெரிகின்றன. பாத்திரங்களிடம் அதீதம் தெரிகிறது. மித மிஞ்சிய உணர்ச்சி வெளிப்பாடுகள் நேர்கின்றன. தத்துவ ஆன்மீக சஞ்சாரங்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றைக் கடுமையாகச் சிலர் விமர்சித்து வந்தார்கள்.

விமர்சனங்களுக்கு லா. ச. ராவிடம் பதில் இல்லை. ஆச்சரியமே அடைந்தார் ‘எனக்குள் நான் காணாத எதையும் விஷயங்களின் தவனியாகக் கிட்டாத எதையும் நான் எழுதவில்லையே. உண்மையைத்தானே சொல்லுகிறேன்’ என்பதே ஆச்சரியத்துக்குக் காரணம். ஆனால், இன்றைய எதார்த்தவியலின் நிலை தலைகீழாகிவிட்டது. மாயத்தன்மைகளுக்கு மொழி மறுப்பில்லாமல் இயல்பாக விரிந்து இடம் கொடுக்கிறது. கதைமைக்கு முக்கியத்துவம் வேண்டியதில்லை. இது வெளியிலிருந்து வந்த  ஒன்று.  இப்போது அதன்  ஆழமான அர்த்தத்தைச் சொல்ல வந்திருக்கிறது. எதார்த்தத்துக்குள் உள்ளொளிந்திருப்பவற்றைப் புனைவும் கனவும் கொண்டு வெளிப்படுத்திய லா. ச. ராவின் அக எதார்த்தத்திற்கு இதை 50களிலே லா. ச. ரா. செய்திருக்கிறார் என்று ஜெயமோகன் சரியாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தேடல் இது முடிவிலி. லா. ச. ராவின் 70 ஆண்டுப் படைப்பு வாழ்க்கை முடிவிலியின் இருள் கதிரைப் பற்றிய பிடித்துப் போய்க் கொண்டிருந்தது. பிற்காலக் கதைகளை விட முந்தியக் கால கதைகளில் அதிகத் தீவிரத்துடன் அவருக்கு அலுப்பு உண்டாகவில்லை. ஒரு சிறு மூலிகைத் தளிரைக் கண்டுபிடிக்க வனாந்தரங்களைச் சலித்தெடுக்கச் சளைக்கவில்லை. என்றோ எங்கோ கிடைத்து, நழுவிப் போய்விடும் தருணங்களை நிலைநிறுத்த முயன்றார். அவரது ஆன்மிகத் தடம் சுழற்றிச் சுழற்றி அவரை அவர் இடத்திலேயே கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருந்தது. அந்த இடம் செறிந்து செறிந்து செறிந்தது.  இந்தக் கடின உளைச்சல்களின் வதை மீண்டும் மீண்டும் அவரை வேதனைக்கு ஆசைப்பட வைத்தது. உரையாடலின் நடுவே எதோ திருப்பத்தில் அவர் சொன்னார். ‘அபி நான் ஒரு masochist’. இந்த ‘மசோக்கிஸம்’ காமத் துய்ப்பின்போது தன்னைத்தான் வேதனைக்குள்ளாக்கித் திருப்தியடைவது என்ற வழக்கமான அர்த்தத்தில் இல்லை.  ‘செடிகள் செழிப்புக் காணும் போதெல்லாம் காமுறுகிறேன்’. “சொற்களுக்கும் பாலுணர்வு உண்டு’ என்றெல்லாம் சொல்பவரிடம் இருப்பது வழக்கமான காமம் இல்லை. தவத்தில் கிடைத்த “தருணங்களைக் கோத்த மாலையை ஆதிமகளின் கால்களில் காணிக்கையாகச் சனர்ப்பிபேனா, கழுத்தில் மாலையாக அணிவிப்பேனா? என்ற இழுபறிக்குள்ளான ஒரு மனம் எத்தனையோ  மறைஞானிகள்(Mystics) போல இறைக்காதலில் தன்னை வதைசெய்து கொண்டிருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

லா. ச. ரா. தம்  இசைரசனை, அது தந்த உடல்ரீதி அனுபவப் பாதிப்புகள் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். சமயங்களில் அருகிலிருந்தவர்களும்(நான் உட்பட) அந்தப் பாதிப்புகளைக் கவனித்திருக்கிறோம். அவர் பாடி நான் கேட்டதில்லை. அலுவலக வேலை முடிந்ததும் மெரினாவில் கடலோர ராக ஆலாபனை செய்து கொண்டே அவர் நடந்துபோன காலங்களில் நான் அவருடன் இருந்ததில்லை. அவர் கதைகளில் பல இடங்களில் சங்கீத அனுபவங்கள் வெள்ளமாய்ப் பெருகுகின்றன. ‘தாம்புராக் கட்டை மேல் முகத்தைப் பதித்து  ஓசையை மூர்க்கமாய் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்த’ அவர் பாத்திரங்களை வாசகர்கள் பார்த்திருப்பார்கள். இங்கே நான் சொல்ல வருவது அவற்றை அல்ல. லா. ச. ரா. வின் உள்ளமைப்பிலும் அவர் எழுத்தமைப்பிலும் உள்ள இசைமை பற்றி ‘I live in terms of music. I speak in terms of music’  என்று அவர் சொன்ன இசைமை பற்றி அவரது சிந்தனை முறையிலேயே இசையின் அருப வடிவழகுகள் படிந்திருந்தன. ஹிந்துஸ்தானியின் நீண்ட நெடு உயரத்து ஆலாபனைகள் அவர் எழுத்தமைப்பில் இருக்கின்றன. சில சமயங்களில் ஆலாபனை விரிவில் எட்டப்படும் உச்சங்களை எழுத்தின் முதல் துடிப்பிலேயே காட்டிவிடுவார். புத்ர நாவல் “அடே” என்ற ஆங்காரப் பொறிச்சிதறலாகத் தொடங்குவது இந்த முறையில்தான்.  ஒருவர் கேட்டார் லா. ச. ராவிடம், ‘எழுத்தில் எப்படி இசை விளைவைக் கொண்டு வருகிறீர்கள்?’ லா. ச. ரா திருப்பிக் கேட்டார்: ‘ஸ்வரங்கள் ஓசையின் ஒழுங்குபடுத்திய arrangementsவார்த்தைகளையும் பிசிறு எடுத்து regulate பண்ணினால் ஏன் musical effect உண்டாக்க முடியாது?.

லா.சா.ராவிடம் அவரது ‘அஹுதி’ கதைபற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். ஆசையுடன் நெருங்கிய காளையை அதன் பசுக்காதலி எதிர்பாராமல் முட்டி மலையுச்சியிலிருந்து உருட்டி விடுகிறது. அந்தக் கதையை வானொலியில் படித்தபோது ‘அம்மா….. என்று அலறியே காட்டினேன்’ என்றார். லா.ச. ரா குழந்தைகளுக்கு மிருகங்களைப் பிடிக்கும் அவற்றை அவை உண்மையாகப் பார்க்கும். வெளிப்படுத்த இயலாமை, புரிந்து கொள்ளப்படாமை என்னும் வகையில் அவை அவற்றோடு ஒத்தவை. லா. ச. ரா. குழந்தைமையின் திகைப்பு மண்டிய பரப்பில் இயங்கியவர். ஆதனால் அவரது உலகில் மிருக நடமாட்டம் சாதாரணம். நமக்குள் இருக்கிற மிருகங்களுக்குள் நாம் இருக்கிறோம் என்று கண்டறிந்தவர் அவர். மனிதக் குரூரங்களோடு மட்டுமல்ல. மனித உன்னதங்களோடும் இணைத்து  அவர் மிருகங்களைப் பார்த்திருக்கிறார். சுதந்திரம், தன்னிச்சை, உணர்ச்சி வெளிப்பாட்டில் தயக்கமின்மை உண்மையை ஒளிக்காமை, சொல்லற்ற வெளிப்பாடு இவை அவர் படைத்த பாத்திரங்களுக்குள் வைத்துக் காட்டப்படும்போது மிருக குணங்களெனக் காட்டுகிறார். மேலான மன ஒன்றிப்பில் எந்தச் சிறு அசைவுமின்றி ஒருவரையொருவர் ஆழத்தில் புரிந்து கொள்கிறார்கள். அதை அவர் ‘மிருக சூசகம்’ என்றார்.  அவர்கள் குரல் தந்தால் ‘விலங்குக்கு விலங்கு கூவல்’ புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்று தம்மீது குறை வந்தால் அவர்கள் அவர்கள் சொல்வது: ‘நாங்கள் மிருகங்கள்’ பூச்சற்ற பிறவிகளாக இருக்கிறார்கள்; ‘காட்டிலிருந்து பிடுங்கினவர்கள் போல இருக்கிறார்கள்’ என்பது அவர்கள் பற்றிய வருணனை. துரத்தியடிக்கும் வாழ்வின் மீதான அவர்களின் கடைசிக் கட்ட எதிர்வினை பற்றி: ‘வேட்டையில் எதிர்த்துத் திரும்பிய மிருகங்கள்’, மனிதர், மிருகம், வானம், கடல், மண் என்ற பேதமற்ற
லா. ச.ரா.வின் பரிவு பிரபஞ்சமயமாகி விரிவடைந்தது. அதனால் தான் ‘மின்னல் வானத்தை வெட்டும்  போதெல்லாம் வானம் அடிபட்ட விலங்குபோல் அலறியது’ என்று காண முடிந்தது.

கடைசியாக நான் லா.ச.ரா.வைப் பார்த்து பேசியது அவர் 90 வயதை முடிக்கச் சில நாட்கள் இருந்தபோது யாரைச் சந்தித்தாலும் அவர்களை முதன்முதல் பார்த்த காலத்துக்குப் திரும்பிப் போய்விடுகிறவராக இருந்தார். இலக்கியத் தொடர்புக்கும் மேலாக நட்பை முதன்மைப்படுத்தினார். அவர் நண்பர் மாசு ‘உங்கள் எழுத்து நிமித்தமாக நம் சந்திப்பு நிகழ்ந்தது. உங்களைச் சந்தித்தபின் உங்கள் எழுத்தைவிட நீங்கள்தான் எனக்கு முக்கியம்’ என்றாராம். எழுத்துக்கு வெளியே பார்க்கக் கிடைத்த லா.ச.ரா. பின்னும் மேலான மனிதர்.

இலையில் மோர்ச்சோறு – அதன் மீது லா.ச.ரா.வின் கை விரிந்திருக்கிறது. வாயோரம் அரைப் பருக்கை பார்வை எதிரே யார்மீதோ, எதன்மீதோ இருக்கிறது. முற்ற முதிர்ந்த தோற்றம் இந்த லா. ச. ராவின் தோற்றம். இந்த லா. ச. ரா.வின் புகைப்படம் அவர் வீட்டில்ன் கிடைத்தது. என்னோடு பணியாற்றும் பேராசிரியை அந்தப் படத்தைப் பார்த்ததும் கண்களும் ‘ஐயோ எப்படி ஒரு குழந்தை போல இருக்கிறார்’ என்று ஆசையாக அதை எடுத்து வைத்துக் கொண்டார். ‘புத்ர’ நாவலில் வரும் கிழவர் சாப்பிடும்போது பரிவுடன் நெகிழ்வுடன் ஒரு அச்சத்துடன் குழந்தையைப் பார்ப்பதுபோல அவர் மருமகள் அவரைப் பார்த்துக் கொண்டு நிற்கும் காட்சி நினைவுக்கு வந்தது. இப்படித்தான் லா.ச.ரா. நம்மில் பலர் பிறப்பதற்கு முன்பே நம்மில் பலரைப் படைத்து வைத்திருக்கிறார்.

இப்போது நினைக்க லா. ச.ரா. பற்றிய நினைவுகளில் சாரமாக நிரந்தரப்படுவது தூய்மை குழந்தையின் தூய வெறுமை. அவரே சொல்லியிருப்பது போல ‘தன்னுள் யாவரையும் அடக்கி நிறைந்து கவித்துவமான விசனத்துடன் தனிமை கொண்ட அரூபத்தின் ‘வெறிச்’.... புதன், 8 அக்டோபர், 2014

  {தீராநதி (ஆகஸ்டு 2009 )இதழில்  வெளி வந்தது.}

கவிதை படிப்பது என்பது ஏதோ மலையைப் பிளக்கும் செயலல்ல !
நேர்காணல்: கவிஞர் அபி  
.........................சந்திப்பு :பவுத்த அய்யனார் 

               பேராசி¡¢யர் பீ.மு.அபிபுல்லா (1942) அவர்களின் கவிதைக்கான பெயர் அபி மலைகள் சூழ்ந்த போடிநாயக்கனூ¡¢ல் பிறந்தவர். அபி அவர்களின் முதல்  கவிதைத் தொகுப்பான 'மௌனத்தின் நாவுகள்' (1974) நூளை வெளியிடவே கவிஞர் மீரா அவர்களால் அன்னம் பதிப்பகம் தொடங்கப்பட்டது என்பது ஒரு வரலாற்று நிகழ்வு.'அந்தர நடை’ (1979),'என்ற ஒன்று' (1988) என்ற பெயர்களில் இவரது கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன.மாலை தொகுப்பை உள்ளடக்கிய மொத்தத் தொகுப்பை கலைஞன் பதிப்பகம் 'அபி கவிதைகள்' என்று 2003-ம் ஆண்டு வெளியிட்டது.

நாற்பது ஆண்டுகளுக்கு மேல் எழுதி வரும் அபி அவர்களின் கவிதைகள், தமிழுக்குப் புதியனவாகவும் செறிவூட்டுபவையாகவும் உள்ளதே தனி சிறப்பு.
எந்தவித இலக்கிய குழுக்களிலும் தன்னைப் பொருந்திக் கொள்ளாதவர். அதனாலேயே கண்டு கொள்ளப்படாதவர். ஆனால், யாராலும் தள்ளி வைக்க முடியாதவர். தன் கவி வலிமையால் தனித்த ஆளுமை கொண்டவர்.
'தமிழின் மிகச் சிறந்த  அருவக் கவிதைகள்' என்று மதிப்பிடப்படும்  அபி அவர்களின் கவிதைகளை உள்வாங்கிக்  கொள்ளவும், தனித் தன்மை வாய்ந்த அவரது கவிதை இயல் சிந்தனைகளைப் பு¡¢ந்து கொள்ளவும் உதவும் வகையில் இந்த நேர்காணல் அவரது கவித்துவ ஆழங்களையே மையங்கொண்டதாக அமைகிறது.

கவிக்கோ விருது (2004), கவிக்கணம் விருது(2004),கவிஞர் தேவமகள் அறக்கட்டளை விருது (2008) முதலிய விருதுகளைப் பெற்றுள்ள,இவரது கவிதைகள் முனைவர், ஆய்வியல் நிறைஞ்ர் பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஆங்கிலம், இந்தி மொழிகளிலும் இவரது கவிதைகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

மனைவி திருமதி.பா¡¢ஷா, காலமாகி விட்டார்(2005). அஷ்ரப் அலி, ரியாஸ் அஹ்மது என்று இரு மகன்கள். பர்வின் பாத்திமா என்று ஒரு மகள். எல்லோருக்கும் திருமணமாகிவிட்டது. அபி அவர்களுக்கு ஒரு பேரனும் மூன்று பேத்திகளும் உள்ளனர்.

தனியார் மற்றும் அரசு கலைத் கல்லூ¡¢களில் 33 ஆண்டுகளும், சென்னையிலுள்ள தமிழ் இணையப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 5 ஆண்டுகளும் பேராசி¡¢யராகப் பணியாற்றியிருக்கிறார். இப்போது மதுரை, மகாத்மா காந்தி நகரில் வசித்து வருகிறார்.

தீராநதி: உங்கள்  கவிதையின் வாசகர் எண்ணிக்கை வி¡¢வானதல்ல என்றாலும், வாசிக்கின்றவர்கள் ஆழ்ந்த வாசிப்புடையவர்கள். உங்கள் கவிதையின் தனித்தன்மையை, தரத்தை நுட்பமான பார்வையால் உணர்கிறவர்கள். அவர்களில் சிலர் பாராட்டுக்கோ விமர்சனத்துக்கோ உங்கள் முதல் தொகுப்பான 'மௌனத்தின் நாவுகள்' கவிதைகளையே பெருமளவுக்கு எடுத்துக் கொள்கிறார்காளே?.

கவிஞர் அபி: அன்னம் பதிப்பகத்தில் முதல் வெளியீடாக  'மௌனத்தின் நாவுகள்' வெளிவந்த போது (1974) அதற்கு பரவலான வாசிப்புக் கிடைத்தது. சற்றுப் பரபரப்பாகப் பேசவும்பட்டது. ந. பிச்சமூர்த்தி மிகவும் பாராட்டினார். ஞானக்கூத்தன் கடுமையாக விமர்சித்தார். அந்தக் கவிதைகளின் உடனடி ஈர்ப்பினால்தான் அதை வெளியிட மீராவும் அப்துல்ரகுமானும் அன்னம் பதிப்பகத்தையே தொடங்கினார்கள். என்னுடைய அடுத்தடுத்த , முற்றிலும் திசைமாற்றம் கண்ட நகர்வுகளை பின் தொடந்தவர்களை 'மௌனத்தின் நாவுகளை'த் திரும்பிப் பார்க்கவில்லை, என்னைப் போலவே. ஆனால் என் தாய்மைப் பரவசம் அந்தக் தொகுப்பில் கொட்டிக்கிடப்பது வாசகருக்கு- விமர்சகருக்குத் தேவையில்லாத, எனக்கு மட்டுமேயான சொந்த விஷயம். அது மட்டுமல்ல, அடுத்தடுத்த வளர்ச்சிகளை ஊடிருவி இன்றுவரை என் கவிதையின் அடிப்படைக் கூறுகளாக உள்ளவற்றின் தொடக்கம் அந்தக் கவிதைகளில் இருந்திருப்பதை இப்போது பார்க்கிறேன்.

தீராநதி: 'வானம்பாடி' ஆரம்ப இதழ்கள் ஒன்றிரண்டில் உங்கள் கவிதைகள் வந்திருந்தாலும் நீங்கள் வானம்பாடி இல்லை அது எப்படி?

கவிஞர் அபி: எனக்கு மிகவும் பி¡¢யமான ஒருவரால் ஏற்பட்ட கசப்பு - அதன் உளைச்சலிலி¡¢ந்து விடுபடுவதற்காக ஒரு கவிதை எழுதினேன். அதை எங்களிருவருடன் சேர்ந்த வேறொரு வருக்கு எழுதிய கடிதத்தோடு  அனுப்பினேன். அவருடனிருந்த ஒரு வானம்பாடிக் கவிஞர் என்னைக் கேட்காமலே அதை 'வானம்பாடி'யில் வெளியிட்டுவிட்டார். 'அக உளைச்சல்' கவிதையை வெளியிட்டதற்காக அந்த இதழுக்குக் கண்டனக் கடிதங்கள் வந்திருந்தன எனப் பின்னர் அறிந்தேன். என் தொகுப்பு எதிலும் இடம் பெறாத, பிரசுர நோக்கமில்லாத வானம்பாடிக் கவிதைப் போக்குக்குச் சற்றும் சம்பந்தமில்லாத அந்தக் கவிதை-அதற்குப் பிறகும் ஒரு கவிதையைக்  கொண்டு என்னை வானம்பாடி என்று யாரோ ஒருவர் சொல்லப்போக, என் கவிதைகளோடு நேரடிப் பரிச்சயமில்லாத வேறு சிலர் சொல்வழிச் சொல்லாக அதையே சொல்லியிருக்கிறார்கள். வானம்பாடிகளே கூட என்னை ஏற்றுக் கொண்டதில்லை. 'இதற்கு மறுப்பு எழுத்துகள்' என்று எப்போதோ ஒரு முறை பிரம்மராஜன் சொன்ன நினைவு. நான் எழுதவில்லை. எழுதுமளவு இது ஒரு பிரச்சனையில்லை. இது ஒரு வேடிக்கைதான் என்பதால் இப்போது  சொல்கிறேன். இது மறுப்புமன்று. ஒரு நினைவுகூட்டல் மட்டுமே.
தீராநதி: நா.காமராஜன், அப்துல்ரகுமான், மீரா போன்றவர்களுக்கு நெருக்கமாக இருந்திருக்கிறீர்கள். ஆனால் உங்கள் கவிதைகள்  அவர்களிடமிருந்து மிக விலகி நிற்கின்றனவே?

கவிஞர் அபி: வேறு வேறாக இருப்பது 'விலகியிருத்தல்' ஆகாது? அவரவரிடம் அவரவர் கவிதை. அவரவர் விமர்சனம். விஷயமாக இருந்தாலும் வெளிப்பாடாக இருந்தாலும் சின்ன வயது முதலான தோழமையும் அன்பும் காரணமாகப் படைப்பு ஒரே மாதி¡¢ இருக்கும் இருக்கவேண்டுமென்று எதிர்பார்பது தவறு. அது தொடர்பாக எனக்கொரு உறுத்தல்,.படைப்புப் போக்கில் நான் அவர்களிடமிருந்து வேறுபட்டிருந்தாலும் என் கவிதைகளை மதித்து ஏற்கிற பக்குவம் அவர்களுக்கு உண்டு. மீரா இருந்தவரை என் கவிதைகளை அவரே வெளிட்டு வந்தார். ஆனல் என் கவிதைப் போக்கிற்கு ஒத்தவர்கள் - என்னை ஏற்க வேண்டியவர்கள் என்று சொல்லத்தக்க பலர் பலகாலமாக என் இருப்பைக் கண்டும் காணாமல் மௌனம் காத்தார்கள்.

தீராநதி: உங்களை ஆழமாகப் பு¡¢ந்து கொண்டு எழுதிய ஜெயமோகன் போன்றவர்கள் இந்தப் புறக்கணிப்பு குறித்து கண்டனத் தொனியில் எழுதியி¡¢க்கிறார்கள். எனினும்,'இத்தகைய அருவக்கவிதைகள் எந்த ஒரு பண்பாட்டிலும் தேர்ந்த சிறுபான்மையினருக்கு உ¡¢யவை' என்று கவிதையின் தனித்தன்மையையும் காரணமாகச் சொல்லியிருக்கிறார்களே?

கவிஞர் அபி: நான் வாசக எண்ணிக்கைக் குறுக்கம் பற்றிக் சொல்லவில்லை. தமிழ்க் கவிதைப்பரப்பு முழுவதையும் அலசிப் பார்த்து விட்டு எழுதுவதாகக் காட்டிக் கொள்ளும் தொடங்கியிருந்த காலத்தில் இலக்கிய அரசியல் ரொம்பவும் அழுகிப்போயிருந்தது. நான் இயல்பிலேயே உள்ளொடுங்கி இந்தக் குழுச் சண்டைகளைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறேன். ஏதேனும் ஒரு குழுவினுள் ஈர்க்கப்பட்டு விடுவேனோ என்று அஞ்சினேன். தொடர்புகளை உண்டாக்கிக் கொள்ளவோ, தேடிவந்த  தொடர்புகளைப்   பராமரிக்கவோ விரும்பாமல் ஒதுக்கினேன். வாசகன் தனது வாசிப்புத் தெரிவுக்காக இத்தகையவர்களையே எதிர்பார்த்திருக்கும் குழலில் வாசகர்கள் மீது நான் குறைப்பட்டுக் கொள்ளவே கூடாது மேலும் இன்றைய பக்குவத்தில் யார் மீதும் எனக்குத் குறையில்லை. இவ்வளவு காலம் கழித்து இது ஒரு திறப்புதான். வெடிப்பு இல்லை.

தீராநதி: கவிதை பற்றிய உங்கள் வரையறைகள் 60கள்,70கள்,80கள் அப்புறம் இன்று வரை எப்படியேல்லாம் மாறி வந்துள்ளன?

கவிஞர் அபி: கவிதை பற்றிய என் கருத்தோட்டங்களுக்கு. ஒரளவு மட்டுமே என் வாசிப்பு பொறுப்பாகும். பெரும்பாலும் என் படைப்பனுபவமே எனது கவிதையினைத் தீர்மானிக்கிறது.. இவை எனது படிநிலை வளர்ச்சிகளைப் பின்னோக்கிப் பார்க்கும்போது 
தெரிகின்றவை. தொடக்கத்தில் சொந்த வாழ்வின் அழுத்தங்களுக்கும் அவற்றோடு வேர்முடிச்சுத் தொடர்புடைய தத்துவ தரிசனங்களுக்கும் இடையே ஊசல் பயின்று என் கவிதை காரணகா¡¢ய அலசல் இன்றி துக்கத்தின் உள்ளே புகுந்து அனுபவிப்பதே பிரதானமயிருந்தது. தாகூர்-ஜிப்ரான் பாதிப்பு அதற்கு அடிப்படைக் காரணமாக இருந்த என் மனநிலைகள் என் கவிதையைத் தீர்மானித்தன.
அடுத்த நகர்வு சட்டென நேர்ந்தது. மேற்புறச் சலனங்களின் ஓசை எட்டாத தொலைவாழத்தில் உள்-வெளி பேதம் மறைந்தது. 'உன்னைப் பி¡¢ந்து விலக்கிக் கொண்டே/ உன்னைத் தேடி/ உன் தவம் மட்டும் உடன் வரப் போகிறாய் என்ற விதமாக என் எண்ணற்ற பிம்மங்களுடனான ஊடாட்டம் தந்த வெற்றிகளையும் தோல்விகளையும் கவிதை பதிவு செய்தது. 'இல்லாதிருப்பதும் இருப்பதும் ஒன்றே' என்று எந்தத் திகைப்புமின்றி என் காதில் வந்து சொன்னது. சூசக இருள்களைத் தொடுத்து அனுபவம் செறிவானது. 'இதோடு  நில்; அடுத்த வார்தைக்குப் போகாதே; என்ற என் படைப்பாளியின் எச்சரிக்கை கவிதையில் வளவளப்பை ஒழித்தது. அழகு என்ற ஒன்று தனியாக இல்லை. உன்மையின் ஒளிநிழலே அது எனப் பு¡¢ந்து கொண்டேன். 'அழகு படுத்தாதிருக்க' மிகவும் முயன்றேன். இந்தக் கட்டத்தில் என் உழைப்பும் களைப்பும் அதிகமிருந்தன.

சற்று நீண்ட இடைவேளைக்குப் பின் நேர்ந்தது அடுத்த நகர்வு. கடின முயற்சிகளைக் கைவிட்டேன். 'தீவிரங்கள்' அகன்றன. இப்போதுதான் என் கவிதையின் ஆசுவாசம் தெரிந்தது. கவிதை சுதந்திரமானது எனக் கண்டேன்.என் கவிதை தன் தன்மையோடு தன்னைப் பிறப்பித்து கொள்வதாகியது. குணரூபங்கள் என்னைக் கவனப்படுத்தாமல், என் பார்வையில்  தன்னியக்கம் கொண்டன. 'நான் நிகழ்கிறவன் இல்லை' என்றோ, 'நான் இல்லாமலே என் வாழ்க்கை எதேச்சையில் அருத்திரண்டது' என்றோ,'சொல்லாதிருத்தலும் எளிது' என்றோ 'தத்துவச் சுமை கரைந்து வெறும் வாரனையாம் மிஞ்சிற்று' என்றோ என் உள்ளகம் காணச் செய்தன கவிதைகள். எதிர்மறைகளற்ற பிரபஞ்ச ஒருமை கவிதையின் முதன்மைப் பட்டது. இப்போது நான் 'தெளிவைத் தேடிப் பிடிவாதம் பிடிக்கவில்லை'. தெளிவின்மை தரும் திகைப்பில் திளைக்கப் பழகினேன். கவிதையோ தானடைந்த சுதந்திரத்தில் குழு எளிமை கொண்டு விட்டது.

மேலுமொரு பரிமாணம் கிட்டியபோது,நான் என் பிள்ளைப் பருவத்துக்குத் திரும்பியிருந்தேன், என்றும் என்னுள் நிரம்பிக் கனத்திருக்கும் என் மாலைப்பொழுதோடு,. என் சொந்த ஊ¡¢ன் இயற்கை என்னுடனான சைகை ஊடாட்டத்தில் எனது தனிமையைத் 'தான்' என்றே ஆக்கிக் கொண்டிருந்தது. சொல்லில் வராத அந்த அனுபவங்களின் சாயல் இன்றைய முதிர்ச்சியில் படிந்து கவிதையாக வெளிப்பட்டது. சங்கக் கவிதையில் முல்லைத் திணையின் உள்ளடக்கம் இருத்தல். அதாவது, தலைவனுக்காகத் தலைவி காத்திருத்தல். மாலை அதற்கு¡¢ய பொழுது. அந்த மரபின் பெருவி¡¢வாக - ஒரு புதிய முல்லைத் திணையாக - பிரபஞ்சத்தின் காத்திருப்பை ஒரு தரிசனமாகக் கண்டவை என் சமீபகாலத்துக் கவிதைகள். படைப்பின் அனைத்து அம்சங்களும் காத்திருக்கின்றன காலம் காலமாக எதற்கென்று பு¡¢யாத இந்தப் பிரம்மாண்டக் காத்திருப்பின் கனத்தை உணர்த்தக் கவிதைகள் போதாதவை . அதற்கப்புறம், இப்போது அடுத்த பரிமாணத்துக்குக் காத்திருக்கிறேன்.

தீராநதி: அப்படியானால் 'மாலை' என்ற உங்கள் கவிதைத் தொடர் முற்றிலும் உங்கள் இளமைப் பருவம் சார்ந்ததா?

கவிஞர் அபி: இளமைப் பருவமில்லை. பிள்ளைப் பருவம். அப்போது வீட்டு வாசலில் மணிக்கணக்காக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மலைக்குவடுகளுடன் உறவு ஏற்பட்டிருந்தது. ஊரைச் சுற்றிலுமிருக்கும் மலைகளும் காடுகளும் சிற்றோடைகளும் கடிங்குளிரும் நிசப்த நள்ளிரவு நட்சத்திரங்களும் எனக்கே சொந்தம்போல இருந்தன. சாதாரண வெளிப்படைகளுடன் அசாதாரண விநோதங்கள் குழம்பிக் கலந்திருந்தன.அப்போது இவை கவிதையினும் மேலான, தூய மென்பரப்பில் பிள்ளை மனப் பரப்பில் கிடந்தன. இப்போதோ வெறும் கவிதையில் தான் கிடக்கின்றன.

தீராநதி: 'மாலை' கவிதைகளுக்கான முதற் புள்ளி எப்படி உருவானது?

கவிஞர் அபி: நான் அவ்வப்போது அல்லது அடிக்கடி என் பிள்ளைப் பருவத்திற்குத் திரும்பிப் போவதுண்டு. சில சமயம் நீண்ட நாட்கள் அங்கேயே தங்கி விடுவேன். தங்கும் கால அளவு, நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் அதிகமாக தொடங்கியது. 'யோசிப்பும் நின்றுபோன மௌனத்தை என் வடிவில் இருந்த மௌனத்தை', அங்குதான் சரியாக அனுபவம் காண முடிந்தது. நீங்கள் கேட்ட முதற்ப்புள்ளியைதான் காட்டவேண்டியிருக்கிறது. மற்றபடி என் கவிதைகள் சிலவற்றுக்கான சூழல், காரணம் என்று சிலவற்றைக் குறிப்பிடலாமே தவிர, மூலப்புள்ளி என்று எதையும் சுட்ட முடியவில்லை. நான் படைப்பதற்கு முன்பு, ஏன், எனக்கு முன்பே கூட அவை இருந்தன என்று தான் நினைக்கிறேன். அந்த விஷயங்கள் உட்பட.

தீராநதி: இது எப்படி?

கவிஞர் அபி: ரொம்பவும் அறிவார்ந்த விளக்கம் எதுவும் சொல்ல முடியாது. எதுவும் இல்லாமலிருந்து இருப்பதாக ஆனது என்பதில்லை. எனக்கு முன் இருந்த நாட்கள் நான் இல்லாத நாட்களில்லை. நான் பிறக்கக் காத்திருந்த நாட்கள். என் கவிதையும் எனக்காகக் காத்திருந்து என்னோடு இணைந்து கொண்டதுதான். இதில் மூலப்புள்ளி எது,யார்?

தீராநதி: இந்தப் பதிலைப்போலவே உங்கள் கவிதைகள் மிகச் சுருக்கமான சொற்களில் செறிவாக எப்படி உருவாகின்றன?

கவிஞர் அபி: படைப்புருவாக்கம் பற்றிச் சற்று வி¡¢வாகத்தான் சொல்ல நேர்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் என் நண்பர் விஜய திருவேங்கடம் கேட்டார். 'உங்கள் படைப்பு முறை பற்றிச் சொல்லுங்கள்' என்று. அந்த நிமிஷம் அவருக்குப் பதில் தர என்னிடம் சிந்தனைக் கருவி எதுவுமில்லை. நிறையச் சொல்லலாம். ஆனால் அந்த வி¡¢வைப் போல அலுப்படையச் செய்வது வேறொன்றுமில்லை. சொல்ல நிறைய இருக்கின்றன - சொல்ல ஒன்றுமேயில்லை. ஒரே அர்த்தத்திக்குக் கொண்டு சேர்க்கிற எதிர்மறைகள். நண்பருக்கும் எனக்கும் இடையே இருந்த மேசை மீது அவருக்கு வந்த ஏதோ ஒரு அழைப்பு அட்டை வழவழப்பான வெண்மையில். அச்சுப் பக்கத்தின் பின்புறமுள்ள காலிப்பக்கம். அதில் நடுவே ஒரு புள்ளி இருந்தது. என்ன சொல்லப் போகிறேன் என்று நினைப்பதற்கு முன்பே முன் தீர்மானம் எதுவுமின்றிச்  சொல்லத் தொடங்கிவிட்டேன்.

'இதோ இந்தப் புள்ளியைப் பாருங்கள். இது வேறு யாருக்கோ கிடைத்தால் அவர் அந்தப் புள்ளியின் தனிமை உறுத்தியோ தனது அழகுணர்ச்சியின் தூண்டலிலோ அந்தப் புள்ளியைச்  சுற்றி அழகடுக்காக வட்டங்கள் வரையக்கூடும். வேரொருவர் புள்ளியை மையமாக வைத்து வளைந்து நெளிந்து ஓடி கோலங்கள் வரையலாம், ஆனால் நான் இது எதையும் செய்ய மாட்டேன். புள்ளியின் அருகே அமர்ந்து தொட்டுத் தடவுவேன். அதன்மூடி எனக்காக எப்போதிருந்தோ காத்திருந்து. அந்த மூடியைத் திறந்த உள்ளே நுழைந்து விடுவேன்' என்றேன்.

நண்பர் யோசனையில் ஆழ்ந்தார். அந்த நிலையில் நான் சொன்ன படிமக் காட்சிக்கு விளக்கவுரை சொல்லி என் படைப்புருவாக்க முறையை எடுத்துக்காட்டுவது அவரது யோசனைக்குள் நுழைந்து செய்யும் வன்முறை அல்லவா'! அதனால் அத்துடன் நிறுத்திக் கொண்டேன். பின்னாளில் இந்தப் படிமம் ஒரு கவிதையாயிற்று. எதையும் சுற்றித் தி¡¢யாமல்  அதற்குள் நுழைந்து விடுவதுதான் கவிதையில் செறிவு அமைய உதவும். எழுதிய பிறகு சொற்களைக் குறைத்து செறிவி செய்வதல்ல என் முறை. சொல்லுக்கென்று உள்ள செறிவைச் சோதித்து முதல் வடிவத்திலேயே இட்டுவிடுவேன். பெரும்பாலும் தேடி அலையாமல்  இயல்பாக வந்தமையும் படிமங்களும் கவிதையில் செறிவைத் தரும். ஆனால் படிமங்களை, அவற்றின் முழுமையை நோக்கிப் போகவிடாமல் தேவையான வரம்பில் நிறுத்தி வைக்க வேண்டும் இரக்கம் பார்க்கக் கூடாது.

தீராநதி: 'மனசின் உச்சியில் குவிந்து முரடு பட்டது அந்தி', 'ரத்தம் இருள்வது தெரிகிறது', 'இல்லாமையிலிருந்து தோற்றங்கள் எனக்கு வரத்தொடங்கியிருந்தன' இப்படியான படிமங்கள் உங்கள் கவிதைகளில் செறிவைத் தருவது தெரிகிறது. ஆனால் இவற்றின் தளம் கண்காணா உலகொன்றைத் தாங்கி நிற்பதாகப்படுகிறதே?

கவிஞர் அபி: தளம் வேறு என்றாலும், அது ஒன்றும் மாய உலகு இல்லை. நீங்கள் பார்க்கத் தவரும் உங்களுக்குள்  உள்ள உலகுதான். உதாரணமாக, நீங்கள் சுட்டிக்காடிய ஒரு படிமத்தை எடுத்துக்கொள்ளுங்கள். 'மனசின் உச்சியில் குவிந்து முரடு பட்டது அந்தி'. காலம் முடிவிலியில் இருந்து சூ¡¢யனும் கடிகாரங்களும் சின்னச் சின்ன பிடிமானம் தர முடியுமா என்று பார்த்துத் தோன்றுகின்றன. நமது பிரக்ஞையோ தானே காலமாகப் பிரமைப்பட்டு ஒருவிதமான வெற்றியைப் பெறும். குறிப்பிட்ட ஒரு தருணத்தில் நினைவா பொழுதா என்று பி¡¢த்தறிய முடியாத ஒரு அனுபவம் ஒன்றிப்பு நேரும். அடுத்த வினாடியில் மறைந்தும் போய்விடும். 'பொழுதின் நினைவும் நினைவின் பொழுதும் ஒன்றினுள் ஒன்றாகிவிடும்'. இந்தத் தருணம் யாருக்கும் வாய்ப்புதான். 'மனசின் உச்சியில் குவிந்து அந்தி முரடுபடுவது ' இந்த ஒன்றிப்பில் தான். ஆழ்ந்து பாருங்கள். பு¡¢யவில்லை என்பது கூட ஒரு பு¡¢தலே, பு¡¢தலின் முதற்படியே என்று தைரியம் கொள்ளுங்கள்.

தீராநதி: அப்படியானால் பு¡¢தலுக்கான சமிக்ஞைகள் உங்கள் கவிதைலேயே வைக்கப்பட்டிருக்கிறதா?

கவிஞர் அபி: என் கவிதை குறித்து நீங்கள் கேட்டிருந்தாலும் இது பொதுவாகக் கவிதைகளுக்குப் பொருந்தும் கேள்வி தான். கவிதையில் உள்ள ஒரு சொல்லோ வித்தியாசமான ஒரு வார்த்தைச் சேர்க்கையோ தலைப்போ குறிப்பீடுகளோ ஏன், நிறுத்தக்குறியோ கூட சைகை என அமையக்கூடும். குறிப்பிடமுடியாதபடி கவிதை தட்பவெப்பம் புலப்படும் உதாரணங்களும் உண்டு. பழங்கவிதைகளைப் பொறுத்தவரை உரைகள், திணை-துறைக் குறிப்புகள் போன்ற திறப்புகள் உண்டு. ஆனால் நவீன கவிதையின் சற்று  வேறுபட்ட தளம் சார்ந்த கவிதைகளில் எல்லோருக்கும் எப்போதைக்குமான சைகைகள் தென்படாமல் போகலாம். அவரவர் தத்தம் பொருள் நோக்கில் ஏதோ சிலவற்றைச் சைகைகளாகக் கொள்ளலாம். இந்த  சாத்தியங்களை ஒப்புக்கொண்டப்பின், நான் கேட்க்கிறேன். கவிதை என்பது முடிவற்ற ஒரு பொருளா? மொழியைத் தாண்டிக் கவிதை - கவிதையைத் தாண்டி வேறொன்று சைகை கவிதைக்குள்ளே நுழைவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதிலிருந்து வேறொன்றை நோக்கி வெளியேறுவதும். ஆக, கவிதையே ஒரு சைகைதானே! ஒன்றிலிருந்து ஒன்று என்று  சமிக்ஞைகளின் அடுக்குப் பெருகும்போது ஒரு கட்டத்தில் தோன்றக்கூடிய வெற்றிட அமைதியை அனுபவித்தால் என்ன?

பார்க்கும் விதத்தில் பார்த்தால் கவிதை என்ற சைகை அம்புக்குறியாக நின்று எங்கெங்கோ நம்மை இட்டுச் செல்வதை பார்க்க முடியும். ஒரு குறுந்தொகைக் கவிதை:

  யானே  ஈண்டை யேனே; என் நலனே
 ஆனா நோயொடு கான லதே
 துறைவன் தம்மூ ரானே;
 மறை அல ராகி மன்றத் தஃதே

இதை இன்றைய மொழிக்குக் கொண்டு வந்ததால்;'நான் இங்கே தனிமையில்; என் பெண்மையழகு நோயுடன் கடற்கானலில்; தலைவன் தன்னூ¡¢ல்;என் காதல் ரகசியமோ ஊர்பொதுவிடங்கள் எல்லாவற்றிலும்' - தலைவன் திருமணம் செய்து  கொள்ளத் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் தலைவிக்கு  ஏற்ப்படும் பதற்றம் இது. கவிதைக்குள்ளே சைகை  தேடாமல் இந்தக் கவிதையையே ஒரு சைகையாகப் பார்த்தால், காலம் காலமாக நிகழும் பதற்றப் பரப்பில் நம்மைக் கொண்டுபோய் விட்டு விடுகிறதே!'அவற்றை திங்களும் அவ்வெண்ணிலவும். சைகைகளாக நிரந்தரமாகத் தி¡¢ந்தலைந்து கொண்டிருப்பவைதான்.

தீராநதி: உங்கள் கவிதைகளைப் பொறுத்தவரை அவற்றை அணுகுவதற்கு வாசகனுக்குத் தேவைப்படும் தயா¡¢ப்புகள் ஏதாவது உண்டா? உங்கள் கவிதைகளிருந்து வெளியேறினால் அவை எவற்றுக்குச் சைகைகளாகும்?

கவிஞர் அபி: கவிதை படிப்பது என்பது ஏதோ மலையைப் பிளக்கும் - சுமக்கும் செயலல்ல. மலையைக் காண்பதும் அதன் கனம் உணர்வதும் துகள் உணர்வதுமாக சாதாரணச் செயல்தான். எந்தத் தயா¡¢ப்பு எதுவும் இல்லாதிருப்பதுதான் ஏற்றது. குழந்தைமைக்கு நெருக்கமாகவும் என் கவிதைகள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். வேண்டுமென்றால், ஒரு தயா¡¢ப்பாகக் குழந்தைமையின் தூய அறியாமைகளுடன் என் கவிதையை அணுகப்பாருங்கள். அணுகுதல் என்றால் ஒரு தொலைவைத்தாண்டி அடைவது என்று நினைக்க வேண்டாம். இருக்கிற இடத்திலிருந்து இருக்கிற இடம் போவது தான் இந்த அணுகல். ஒருவிதத்தில் கவிதைதான் வாசகனை அணுகுகிறது. 'எப்படியும் கலங்கித் தெளிந்தபோது கண்டோம் தெளிவும் ஒரு கலங்கலேயாக' என்று சொல்லும் கவிதை தயக்கமான வாசகன் முன்னால் நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு அனுமதி பெற்று அவனுள் நுழைகிறது. அணுகியது கவிதையே.

அப்புறம், என் கவிதைகள் எவற்றுக்குச் சைகைகள் என்ற கேள்வி. இது நான்  சொல்ல வேண்டியதில்லை. வாசகன் கண்டடைய வேண்டியது. அவனது அனுபவம் சம்பந்தமானது. படைப்பாளியை விடவும் அதிக ஆழம் போகக்கூடிய வாசகர்களும் இருக்கிறார்கள். நுட்ப உணர்வுள்ள வாசகனும் கவிதையும் சேர்ந்து அடைவது இந்த வெற்றி. இருந்தாலும், எனக்கு நானும் ஒரு வாசகன் என்பதால் என் கவிதை எனக்கு என்ன சொல்கிறது எனச்  சுட்டிக்காட்டலாம். இதற்கு என் கவிதை வரிகள் சிலவற்றைத் தருகிறேன்.

'இந்தக் கவிதை
 ரொம்பவும் எளிமையானது
 ஒன்றும் சொல்லாதிருக்கிற
 ஒன்றும் இல்லாதிருக்கிற
 எளிமை'

'தனித்தலின் பரவசம்
 அனுபவத்தின் கையிருப்பில்
 அடங்காது
 நழுவி
 வி¡¢வுகொண்டது'';
 சூன்யம் என்ற ஒன்று
 இருந்தவரை
 எல்லாம் சரியாயிருந்தது'

இன்னொன்றும் சொல்ல வேண்டும். ஒரு வகையில், படைபாளியின் சுயவாசிப்பு அனுபவம், ஒருவரே இரண்டு பக்கமும் செஸ் ஆடிக் கொண்டிருப்பது மாதி¡¢ என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தீராநதி: வாசிப்பு முறை, வாசிப்பு அனுபவம் பற்றிய வித்தியாசமான பார்வை உங்களிடம் இருக்கிறது. இது பற்றி...

கவிஞர் அபி: நான் படைப்பாளியாக  இருப்பதும், என் படைப்பாக்க முறைகளைக் கவனப்படுத்திச் சிந்திப்பதும்தான் காரணம் என்று நினைக்கிறேன். நான் உட்பட எல்லாப் படைப்பாளிகளுக்கும் நேர்வது ஒரு தோல்வி. அவர்கள் அனுபவித்தது, உணர்ந்தது அப்படியே அவர்கள் படைப்பில் பதிவானதா என்று கேட்டால், அவர்களால் உறுதியாகச்  சொல்ல முடியாது. படைப்பதற்கு  முந்தி இருந்த அந்த மூலம் உள்ளேயே கிடந்து காலப்போக்கில் மறைந்தும் போய்விடும். நான் முன்னே சொல்லியிருக்கிறேன். 'ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம்' காண முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அது 'ஆழ்ந்திருக்கிறது' என்ற அளவில் தான் காண முடியும். கவிஞனுடைய ஆழம் எத்தகையது என்பதையாவது வாசகன் பு¡¢ந்து கொள்ள முடியுமா? கவிதை தரும் தூண்டலால் வாசகன் தன் ஆழ்த்துக்குப்போய் அதைதான் பார்த்துக்கொள்ள முடியும். வாசகன் அடைவது அவனது சொந்த அனுபவமே.

எழுதியவனை ஏடு ஏமாற்றியதாகவும், படித்தவனைப்  பாட்டு ஏமாற்றியதாகவும் பழமொழியை அர்த்தம் மாற்றிக் கொள்ளலாம். இவ்வளவு தடைகளையும் மீறிப் படைப்பில் உன்னதம் துலங்குகிறது என்றால், அதுதான் படைப்பின் அதிசயம். இதைச்  சொல்லும்போது படைப்பில் வராத படைப்புகள் பற்றிய ஏக்கம் எனக்கு எழுகிறது. அவை மேலும் உன்னதம் வாய்ந்தவை.

தீராநதி: கொஞ்சம் முன்னால் 'தெளிவைத் தேடுவதை விட்டுத் தெளிவின்மையின் திகைப்பில் திளைக்தேன்; என்று சொன்னீர்கள் இதை விவா¢த்துச் சொல்ல முடியுமா?

கவிஞர் அபி: இது 'தெளிவு' என்ற என் கவிதையில் இடம்பெறும் வரி முரண்போலத் தோன்றும் இந்த வெளிப்பாடு வழக்கமான தர்க்கத் தளத்தில் வராதது என்பதை உணர்ந்து கொண்டிருப்பீர்கள். தெளிவு என்று சொல்வது முழுமை, பூரணத்துவம். இதற்குமேல் எதுவுமில்லை என்ற நிலை. தெளிவு என்று நாம் கொண்டிருப்பவை முடிவுகளே. எந்த முடிவுக்குப் பின்னாலும் முற்றுப்புள்ளி போடமுடியாது. கால்புள்ளியோ வினாக்குறியோதான் இடமுடியும். எந்த முடிவும் சந்தேகம் இணைந்து வருவதுதான். நம்மை நாம் பு¡¢ந்து கொண்டிருப்பதாக நினைப்பது, பக்கத்து வீட்டாரைப் பு¡¢ந்து கொண்டிருப்பதாக நம்புவது, விஷயங்களின் கட்டக் கடைசி என்று சிலவற்றை ஏற்றுக் கொள்வது இவையெல்லாம் ஒன்றிரண்டு கேள்விகளின் முன்னிலையில் நொறுங்கி உதிரக்கூடும். யோசித்துப் பார்த்தப்பின்.'எதுவும் எவ்வாறும் இல்லை' என்ற சலிப்பு சிந்திக்கிற ஒவ்வொரொவருக்கும் ஏதாவது ஒரு சந்தர்பத்தில் தோன்றும். அந்தச் சலிப்பை நிறுத்தி வைத்து விசா¡¢யுங்கள்.

அனுபவம் நான் அடிக்கடி துழாவித் தி¡¢யும் பகுதி. நேர்ந்த அனுபவங்கள் மட்டுமின்றி இனி நேர இருப்பவற்றுக்கும் நம் அனுபவ வி¡¢வில் இடமிருப்பதாக எனக்கு நம்பிக்கை. ஒரு உயிர்வாழ்வு முழுவதிலும் கூட நேரத்தவறிய அனுபவங்களுக்கும் இடமுண்டு. யுகங்களுக்கு முன் பின் அனுபவங்களை பாவனையால் தொடக்கூடுமோ என்ற ஆசை தோன்றுகிறது. பாவனையால் பரவெளிக்குமேலே தொடுவது பற்றி பாரதி பேசினார். இந்த அனுபவ சாத்தியத்தை சாத்தியம் என்று உணரலாமே தவிர, அறிவும் உணர்வும் தியானமும் கொண்டு நெருங்க முடிவதில்லை. தத்துவமும் விஞ்ஞானமும் மற்றெல்லா அறிவும் பிரபஞ்சப்  பேரொளியின்முன் கண்கூசி நிற்பவையே. சிந்தையும் சொல்லும் எட்டாத நிலை பற்றி எவ்வளவோ பேசியிருக்கிறார்கள். இதில் தெளிவு என்பது எங்கே? இந்தத் தேடலில் தோல்வி அடைந்தாலும், அந்தக் களைப்பு சுகமானது. அந்தக் கவிதை இப்படி முடிகிறது:

'தெளிவு என்பது பொய்
 என அறியாது
 தெளிவைத் தேடிப் பிடிவாதம்  ஏறிப்
 பாமரப் பயிற்சிகளால் களைத்து மகிழ்ந்த
 பழைய நாட்களை நினைத்துக் கொண்டேன்'

தீராநதி:லா.ச.ரா.படைப்புகள் குறித்து முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்தீர்கள். கவிஞரான நீங்கள் வசனப் படைப்பாளியை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதன் காரணம் என்ன? அவரொடு நீங்கள் நெருங்கி பழகியிருப்பீர்கள். அவரைப் பற்றியும் சொல்லுங்கள்.

கவிஞர் அபி: பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவரை என் ஆய்வுத் தலைப்பு தொடர்பாக சந்திக்தேன். அவர் என் விருப்பத்தைக் கேட்டார். 'லா.ச.ரா படைப்புகள்' என்று சொன்னேன். 'வேண்டாம் அது பு¡¢யாது' வேறு தலைப்பு  சொல்லுங்கள்' என்றார். எனக்கு என்ன சொல்வது என்று தொ¢யவில்லை. பக்கத்திலிருந்த என் நண்பர் பாலசுந்தரம் 'இவர் லா.ச.ரா.வை உன்னிப்பாகப் படித்து  வைத்திருக்கிறார்'என்றார். பல்கலைக்கழகத் தமிழுக்கு இலக்கியத் தமிழின் மீதிருந்த அறியாமை - அக்கறையின்மை வருத்தம் தந்தது.'பு¡¢யாது' என்று பேராசி¡¢யர் சொன்னதில் தொடங்கி. 'என்னை பற்றி என்னைவிட அதிகம் அறிந்தவர் அபி' அவரளவுக்கு ஆழம் என்னால் போக முடியாது' என்று லா.ச.ரா. என்னைக் குறித்து வேறொருவருக்கு எழுதிய  ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது வரை எல்லாவற்றையும். நினைத்துப் பார்க்கிறேன். வாசகன் மீது நம்பிக்கை வைப்பவர் லா.ச.ரா. நேர்பழக்கத்தில் லா.ச.ரா.  மிகவும் இனியவர். முதல் தொடர்ப்பிலேயே உடனடி நெருக்கத்துக்கு வந்துவிடுவார். அவருடைய துணைவியாரும் பிள்ளைகளும் என்னைத் தங்கள் குடும்ப உறுப்பினன் போலவே நடத்தினார்கள். பல வருஷ இடைவெளிக்குப் பின் 90 வயதை அவர் தாண்டியப்போது பார்க்கப் போனேன். அவரைப் பொறுத்தவரை விடுப்பட்ட இடைவெளி குறித்த பிரக்ஞையே இல்லை. எங்கள் தொடர்பு குறித்து என் நினைவில் இல்லாததுகூட அவர் நினைவில் இருந்தது பிறப்பதும் இறப்பதும் வேறுவேறல்ல என்று அவர் நம்பி வந்ததற்கு ஏற்றாற்போல, அவரது மரணம் சரியாக அவரது பிறந்த நாளிலேயே நேர்ந்தது. எப்போதோ எழுதிய என் கவிதையொன்றில் வரும் சில வரிகள் இந்தச் சந்தர்ப்பத்தில்  லா.ச.ரா.வுக்கு அதிசயமாக பொருந்துகின்றன.

'முதலும் முடிவும் மூச்சொன்றிக்
 கூம்பிச் சேர்ந்த அம்பு நுனியில்
 தேம்பி அடங்குகிறது
 தேடல்'

கவிதை தன் இருப்பிலேயே நிலைத்து விடுவதில்லை. அது சைகையாகி உலவிக் கொண்டிருக்கும், எதையதையோ தொட்டுத் திறக்கும் என்று  நான் சொன்னதற்கு இதுவும் ஒரு உதாரணம். அதற்க்கப்புறம் அவர் வீட்டுக்குப் போயிருந்தேன் அவர் துணைவியார் கண்ணில் நீருடன் சொன்னார். மரணத்துக்கு இரண்டு நாட்கள் முன்பு 'நான் போய்விடுவேன். அதற்காக நகை, பட்டுப்புடவை, குங்குமம் எதையும் நீ துறந்து விடக்கூடாது' என்றாராம் லா.ச.ரா எழுத்தைத் தாண்டிப் பார்க்க லா.ச.ரா.பின்னும் மேலானவர்.

தீராநதி: லா.ச.ரா. எழுத்துக்களை எப்போது படிக்கத் தொடங்கினீர்கள்?

கவிஞர் அபி: முதலில் நான் படித்த லா.ச.ரா. புத்தகம் 'இதழ்கள்' தொகுப்பு. மாணவ நிலையில் நான் அவரைப் படித்ததில்லை.ஆசி¡¢யப் பருவத்தின் முதல் ஆண்டில் என் மாணவ, வாசக நண்பர் சீனிவாசன் அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்து தந்தார். அதற்கப்புறம் அவர் படைப்புகளை தேடித்தேடிப் படித்தேன். எல்லா வாசகர்களையும் போல நான் முதலில் மயங்கியது அவரது கவித்துவத்தில் தான்.'கவிதை எனக்குப் பிடிக்காது. ஒரளவுக்கு மட்டும் பாரதி பிடிக்கும்' என்றார் லா.ச.ரா. ஒருமுறை அவர் கவிதை வாசகர் இல்லை என்று எனக்குத் தெரிந்தது. அவர் எழுத்தில் கவிதை இருக்கிறது என்று பலரும் சொல்லக் கேட்டு ஆச்சி¡¢யமடைந்திருக்கிறார். அந்திவான அழகில் சொக்கி 'உமை கவிதை செய்கின்றாள்' என்று  பாரதி சொன்ன மாதி¡¢, லா.ச.ரா.குன்றின் மீது தவழும் மேகப் பொதிகளைப் பார்த்து 'அவை தமக்குத்தாமே ஏதோ கவிதை பு¡¢ந்து கொண்டிருக்கின்றன' என்று எழுதியிருக்கிறார். கவிதை பிடிக்காது  என்றாலும் 'கவிதை' என்பதிலேயே ஒரு மயக்க்கம் இருந்திருக்கிறது. அதனால் எழுத்து அல்லாத வகைகளில் உள்ள கவிதையை அவரால் பார்க்க முடிந்திருக்கிறது. அவர் நடையில் கவிதை இருக்கிறது. சிந்தனைப் பாங்கிலும் அவரிடம் கவிதை இருக்கிறது. மொழியில் சோதனை செய்து  வெற்றி பெறுகிற எந்தக் கலைஞனும் கவிஞனே. நான் மட்டுமல்ல. பல கவிஞர்கள் லா.ச.ரா.வின் கவித்துவத்தின் மீது ஈர்ப்புடையவர்களாக இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

தீராநதி: 38 ஆண்டுகள் தமிழ் இலக்கியம் கற்பித்துள்ளீகள் ஆசி¡¢யப் பணியில் உங்களுக்கு முழு திருப்தி ஏற்ப்பட்டதா?

கவிஞர் அபி: சின்ன வயதிலிருந்தே ஆசி¡¢யப் பணியை இலட்சியமாகக் கொண்டிருந்தேன். முதல் சில ஆண்டுகள் ஒன்றும் தெரியவில்லை. காலப்போக்கில் என் முகத்தில் அறைந்த உண்மை மொழி, இலக்கியக் கல்விக்கு¡¢ய நியாயமான சூழல் கல்விக்கூடங்களில் அமையவில்லை என்பதுதான். நான் மாணவனாக இருந்தும் அந்தச் சூழலில் தான். அப்போது உணரத் தெரிந்ததில்லை. பாடத்திட்டங்களும் கற்ப்பித்தல் மதிப்பீட்டு முறைகளும் இலக்கிய அனுபவத்திற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாதிருந்தன. இலக்கியத்தைப் பாடமாகப் பிடிக்கிற மாணவனுக்கே  வி¡¢ந்து பெருகியுள்ள நவீன இலக்கியத்திலும் விமர்சனத்திலும் சரியான அறிமுகம் கிடைக்கவில்லை. சமீப காலமாக இந்த நிலை சற்று மாறியுள்ளது. அனாலும் மரபுவழிக் கற்பித்தலின் காரணமாக மாணவனுக்குப் பயன் எதுவும் கிடைக்கவில்லை. இந்தாண்டு இலக்கியக் கல்விக்குப் பிறகும் அவனுக்கு. மொழி ஆளுமை வாய்ப்பதில்லை. இதைப் பாடத்திட்டச் சீர்திருத்தம் தொடர்பான ஒரு உயர்மட்டக் கூட்டத்தில் எடுத்துச் சொன்னேன். கல்லூ¡¢க்குள் நுழையாத தமிழ் எழுத்தாளர்களுக்கிருக்கிற மொழி ஆளுமையும் சிந்தனைத் திறமும், தமிழ் இலக்கியத்தைப் பாடமாகப் பயின்ற மாணவனுக்குக் கிடைக்கவில்லை என்று  சுட்டிக்  காட்டினேன். சுயமான சிந்தனை,சுயமான வெளிப்பாட்டுக்குத் தூண்டுவதாகவும் விருப்பமானவகளைப் படைப்புக்குத் தூண்டுவதாகவும்  இலக்கியப் பாடத்திட்டம் அமைய வேண்டும் என்று வற்புறுத்தினேன். எனபரிந்துரைகளுக்கு ஒரளவு வரவேற்பிருந்தது. பல்கலைக்கழகப் பாடத்திட்டக்குழு உறுப்பினராக நான் இருந்தால், அதிலிருந்த மற்ற நண்பர்களைத் துணை  வைத்துக் கொண்டு பாடதிட்டத்திலும் கற்பித்தல், மதிப்பிடுதல் முறைகளிலும் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்தேன். காலங்காலமாக இருந்து வந்த வினா அமைப்புகளை மாற்றினோம்.
பல்வேறு விதமாகவும், மாணவன் சுதந்திரமாகச்  சிந்தித்து எழுத அனுமதிக்கும் வகையிலும் வினாக்கள் தந்தோம். ஒரு குறிப்பிட்ட இலக்கியக் கேள்விக்கு வெவ்வேறு விடைகள் வந்தாலும் ஏற்கவேண்டும் என மதிப்பீட்டு முறைகளில் திருத்தம் செய்தோம். இந்தத் திருத்தங்கள் மாணவனிடம் தன்னம்பிக்கையும் புத்துணர்வையும் உண்டாக்கியதை என் வகுப்புகளில் பார்த்தேன். ஆனால் இந்த மாற்றங்கள் நீடிக்கவிலை. நான் ஒய்வு பெற்ற மறு ஆண்டே பாடத்திட்டம் பழைய திசைக்குத் திரும்பி  விட்டது. பழைமை வென்றது...

எனக்குத் திருப்தியும், உண்டு. இலக்கிய மாணவர்கள் என்மீது காட்டிய அன்பும் எதிப்பார்ப்பும் எனக்கு மகிழ்ச்சி தந்தவை.

தீராநதி: இலக்கியம் சாராத உங்களின் வேறுவித ஈடுபாடுகள் பற்றி.

கவிஞர் அபி: இந்தக் கேள்வியும் கூடக் கவிதையியல் தொடர்பான ஒரு விஷயத்துக்கே என்னை ஈர்க்கிறது. படைப்பு மூலமாக அறியப்படுகிற ஒருவரிடம் நேரில் பார்க்கும் போது  என்னென்ன ஒற்றுமை வேற்றுமைகள் இருக்கின்றன என்று பார்க்கும் ஆர்வம் இந்தக் கேள்விக்குக் காரணம். ஒற்றுமை இருந்தால் படைப்போடு இணைத்து வைத்துப் பார்க்கலாம் வேற்றுமை இருந்தால் அதிசயம் கொள்ளலாம். மீரா அப்படியொரு அதிசயத்தை என்னிடம் வெளியிட்டார். என் முதல் தொகுப்பை அவர் வெளியிட்டிருந்த நேரம். சூப்பர் மார்க்கெட்டில் பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்தேன். திடீரென எதிர்ப்பட்ட  மீரா, 'என்ன அபி, சோதனைச் சாலை'எப்படி சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்தது ?என்று கேட்டார்.சோதனைச் சாலை' என்பது சுயதேடல்  பற்றிய என் கவிதையொன்றின் தலைப்பு.  இது நகைச்சுவைக் கேள்விதான்.

ஆனால் ஒரு பொது எண்ணம் இதில் இருக்கிறது. படைப்பாளி வழக்கமான மனிதனில்லை என்பது மாதி¡¢யான பொது எண்ணம்.படைப்பாளிக்கு  உள்ளேயிருக்கிற வேறொருவந்தான்  உண்மையில் படைப்பவன் என்கிறார் யுங். அவனும் கூடத் தான் தனியொருவனாக இருந்து படைக்கவில்லை. எண்ணிலடங்காத தன் முன்னோர்களின் நனவிலிகளைச் சுமந்திருக்கும் தொகை மனிதன் அவன். அந்தப் படைப்புக்கு வெளிமனிதன் பொறுப்பாக மாட்டான். படைப்பில் தெரியும் தீவிரம், தேடல் உச்சங்கள் தொகை மனிதனின் வெளிப்பாடுகள்.

லா.ச.ரா. ஒ¡¢டத்தில் குறிப்பிட்டிருந்தார். தன் படைப்பில் இருக்கும் உக்கிரத்துக்குத் தன் முன்னோர்களே காரணம், தன்னால் அவ்வளவு உக்கிரங்களையும் தாங்கமுடியாது என்று. இதை ஒரு வாக்குமூலமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இளங்கோவின், கபிலரின் படைப்பு மனிதர்களைத் தான் நம்மால் அறிய முடிகிறது. சமகாலப் படைப்பாளியிடம் இரு மனிதர்களையும் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. ஒருவரை மற்றவராகப் பார்த்துக் குழப்பிக் கொள்கிறோம்.

ஒருமுறை என் படைப்புக்கு அருகில் வெளியிட எனது புகைப்படம் அனுப்பும்படி நண்பர் கேட்டார். நான் மறுத்துவிட்டேன். எனக்குள்ளிருக்கிற படைப்பாளியின் முகம் எப்படியிருக்கும் என்று எனக்கே தெரியாது. அவன் படைப்புக்குப் பக்கத்தில்  என் புகைப்படம் இருப்பது சரியாயிருக்காது என்றேன். அவர்  கோபித்துக்கொண்டார். ஆனால், உலக வழக்கையொட்டி நான் சமரசம் செய்து கொள்வது அவசியமாகிவிட்டது. படைப்பாளியின் வாழ்வும், அனுபவமுமே படைப்பாக வெளிவருவது உண்மை. படைக்கும்போது அவன் வேறு ஆள் என்பது உண்மை. இப்போது சொல்லலாம் எனது வேறு ஈடுபாடுகள் பற்றி. எனக்குச் சங்கீதத்தில் ஈடுபாடு உண்டு. அதிகம் தெரியாது. ஆனால் ஆழ்ந்து ரசிக்கிறேன். விளையாட்டுக்களில் ஆர்வம். முக்கியமாக கி¡¢க்கெட், டென்னிஸ். செஸ் தவிர வேறு  விளையாட்டுகள் நான் விளையாடியதில்லை. அப்புறம், பொதுவாக எல்லோருக்குமுள்ள ஈடுபாடுகள் எனக்கும் உண்டு.

{தீராநதி (ஆகஸ்டு 2009 )இதழில்  வெளி வந்தது.}


திங்கள், 1 செப்டம்பர், 2014

கவிதை -புரிதல்--- தீராநதி இதழில் வெளிவந்த கட்டுரை

ஆகஸ்டு- 2004   தீராநதி இதழில் வெளிவந்த கட்டுரை

 

 
 

1.புரியாதவைகளும், இனிபுரிய இருப்புவைகளும்தான் நிரந்தரமாக மிக அதிகமாக நம்மை எதிர்கொள்கின்றன என்ற எளிய உண்மையை முன்வைத்துத் தொடங்கலாம். கருத்தோட்டங்களையும் பார்வைகளையும் மாற்றி மாற்றி வைத்து நடைபெறுகின்றன. அலகிலா விளையாட்டு மைதானத்தில் கவிதைக்கென்று இருக்கின்ற ஒருமூலையில் பிரவேசிக்கலாம். இருளும் மர்மமும் கிளர்ச்சியும் இன்பமும் மனிதனை உருமாற்றும் மந்திரமும் அடங்கிய மூலை.

2.இன்றைய கவிதைகளில், சில அல்லது பல புரியவில்லை என்பது பெரிதாகச் சொல்லப்படும் குறை கவிதை மட்டுமா புரியவில்லை வசனத்திலும் புரிந்துகொள்ள முடியாதவை இருக்கின்றன. உலக இலக்கிய வகை அனைத்திலும் புரிந்துகொள்;ளமுடியாத படைப்புகள் நிறையவே இருக்கின்றன இன்றைய கவிதை மட்டுமன்று: பழங்கவிதைகளிலும் புரிந்து கொள்ள முடியாதவைகள் இருக்கின்றன. 'திருமந்திரம்' புரிகிறதா? யோக தத்துவ விளக்கங்கள் கிடைத்தால் புரிந்து கொள்ள முடியும் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், வாழ்வின் மிக இயல்பான பகுதிகளைத்தான் சொல்கிறது சங்க இலக்கியம், புரிகிறதா? திணை  துறை கொளு என்னும் மரபு இலக்கணம், உரைகள் இவற்றின் வழிகாட்டல் தேவைப்படுகிறது. இந்த உரைகளும் கூடக் கவிதையில் உள்ள கருத்துக்களை அடைய மட்டுமே வழிகாட்டுகின்றன: கவிதையை அடைய வழிகாட்டுவதில்லை. பிரிவின் தனிமைத் துயரைத் தாங்கிக் கொள்ளமுடியதா குறுந்தொகைத் தலைவி. தன் தவிப்பை வெளிப்படுத்த 'நள்ளென்றன்றே யாமம்' என்று தொடங்குகிறாள். உரையாசிரியர் 'யாமம் நள் என்னும் ஓசையை உடையதாயிருக்கிறது' என்று பொழிப்புரை சொல்லி நகர்கிறார். hசிப்பவனும் புரிந்துகொண்டு விட்டது போல அடுத்தடுத்த வரிகளில் ஓடிக் கவிதையைக் கடந்து விடுகிறான். நள்ளிரவுப் பொழுதும், தனித்த மனமும் ஒன்றினுள் ஒன்றாகக் கலவையாகிவிட்ட ரசாயனத்தைக் கவிஞன் பார்த்திருக்கிறான். பொழுது அவளுக்குள் நுழைந்துவிட்டது: மனசு வெளியேறி வியாபமாகி இருளில்துழாவுகிறது. இன்னதென்று புரியாத மனஒசை, இன்னதென்று புரியாத இருள் ஒசையாகிவிட்டதை எத்தனை பேர் அனுபவத்தில் உள்வாங்கிக் கொண்டிருப்பார்கள். அர்த்த வரம்புக்கு உட்பட்ட சொல்லால் சூழலின் தகிப்பைச் சொல்ல முடியாது எனக் கண்டு அர்த்தமற்ற 'நள்' என்னும் இடைச்சொல்லின் மூலம் கவிதையைச் சாதித்த கவிஞனை எத்தனைப் பேர் புரிந்து கொண்டிருப்பார்கள்.

3.எந்தக் காலம் என்று இல்லை: எல்லாக் காலத்திலும் புரிந்து கொள்ளக் கடினமான கவிதைகள் இருந்தே தீரும். hசிக்கிற எல்லாருமே கவிதைகளைப் புரிந்து கொண்டிருந்தார்கள், என்று சொல்லக்கூடிய காலம் ஒன்று இருக்கவும் முடியாது.

4.நவீன இலக்கிய கலை இவற்றைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று ஒரு கண்டனமாகச் சொன்னவர்களுக்குச் சம்பந்தப்பட்ட படைப்பாளிகள் சூடாகப்பதில் சொல்லியருக்கிறார்கள். 'ரோஜாவின் அர்த்தம் என்ன என்று செடியைக் கேள்', 'உனக்கு உயடஉரடரள புரியுமா?' இந்த பதில்களில் 'நீ அர்த்தம் தேடும் முறை அபத்தமானது', 'முயற்சி பயிற்சிகளால் உன்னைத் தகுதிப்படுத்திக் கொள்', 'எவ்வளவு முயன்றும் படைப்பாளியின் உலகம் உனக்கு எட்டாதென்றால் நெருக்கம் நிகழக்காத்திரு. இல்லையேல் விட்டுவிடு' என்ற கண்டிப்புகள் இருந்தன.

5.'புரிந்துகொள்ளுதல்' என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சிலருக்குச் சில கவிதைகள் புரியும். இவை புரியாத வேறு சிலருக்கு இவர்களுக்குப் புரியாதது புரியும். கவிஞனோ, பதிப்பாளரோ தரும் அடிக்குறிப்புகள் முன்னுரைகள், விமர்சனங்கள் கவிஞனுடனான நேர்ப்பேச்சு இவையெல்லாம் கவிதையை ஓரளவு புரிந்து கொள்ளும் வாயில்கள் தாம். கவிஞனிடம் கேட்டுப் புரிந்து கொள்ளும் முயற்சியிலும்ஒரு சிக்கல் உண்டு. கவிதை எழுத்து வடிவில் வெளியாவதற்கு முன்பு கவிஞனின் மனசுக்குள் இருந்த கவிதைக்கும் வடிவு பெற்ற பிந்தைய கவிதைக்கும் இடையே விலகல் இருப்பதுகண்டு சஞ்சலத்தில் இருக்கும்  கவிஞன் தனது அச்சு வடிவக் கவிதையை வேறு ஆள் பார்ப்பது போல்தான் பார்க்க நேர்கிறது. இந்தக் காரணத்தால்தான் நல்ல கவிஞர்கள் கூடத் தங்கள் கவிதைகளை விளக்க முடியாத தவிப்புக்கு உள்ளாகிறார்கள். காணப்படுவதனிலும் கூடக் காணமுடிந்தது கொஞ்சந்தான் என்பது கலைஞனின் அனுபவம் கு..ராஜகோபாலனின் கவிதை வரி ' கண்கவர்வது காண்பதற்குக் குறைவுதான்' இதைத்தான் சொல்கிறது.; இந்த அவதிகளால் கவிஞன் தரும் விளக்கம் மற்றவர்களுக்கோ அவனுக்கோ பெரிதும் பயன்படும் என்று சொல்ல முடியாது. கவிதையைத் தவிர வேறு துணைத் தொடர்பு கிடைக்காதவர்கள், உடனடியாகப் புரியாவிட்டாலும் காலம் போக்கில் வாழ்வு, வாசிப்பு அனுபவங்களின் பிறகு  புரிந்து கொள்ள முடியும். பலநாள் புரியாதிருந்து எந்தக் காரணமும் இல்லாமல் ஏதோ மின்வெட்டிச் சட்டென்று புரிந்து கொள்ளுதல் உண்டு.

6.கவிதை சொற்களால் அமைவதே. ஆயினும் மொழியின்ஆதிக்கப் பகுதிக்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது. கவிதை நிலையான ஒரே அர்த்தமுடையது என்ற கொள்கை புரண்டு போய்விட்டது. பல்வேறு அர்த்த விசிறல்களில் கவிஞன் என்ன அர்த்தம் கருதினான் என்பதே ஒரு புதிர்தான் என்கிறார் வில்லியம் எம்ப்ஸன். உரையாசிரியர்கள் அவரவர்கள் கண்ட அர்த்தங்கள் சொல்கிறார்கள். வாசகர் அனைவரும் சார்பாளனான உரையாசிரியன் கவிதைக்குள் இயங்கமுடியாது. உரைகள் காலத்தின் ஒருபகுதியில் முளையடித்து கவிதையைக் கட்டிப் போடுகின்றன. மொழி வேறுகவிதை வேறு என்ற உண்மை புலப்பாடததால் வந்தது இந்தக் குழப்பம். கவிஞன் மொழியின் சொற்களைக் கொண்டு கவிதையின் சொற்களை உருவாக்குகிறான். அந்த மொழி அர்த்த நிர்ணயங்களுக்கு முந்திய ஆதிமொழி.(ஆதிமனித மொழியல்ல: அர்த்தத்திற்குச் சிக்காதபடி அடியோட்டத்திலிருந்து அவ்வப்போது எழுப்பிவரும் ஆதிமொழி) மனசுக்குள்ளிருந்து மனசுக்குள் வெளிக்காற்று படாமல் பாயத்தெரிந்த மொழி. மொழி மூச்சு விடும் அழகை அந்த ரூபத்தில் காணலாம். சொல், இங்கே சொல்வதற்கும் சொல்லாதிருப்பதற்கும் பயன்படுவதாகிறது. பிரபஞ்சப் பேரியக்கத்தைச் சாட்சியாய் நின்று பார்த்த பாரதி. 'உண்பது நன்று: உண்ணப்படுவதும் நன்று' என்பதில் 'அர்த்தம்' காண முடியமா? குறிப்பிட்ட அர்த்தம் தரும் சொற்கள் கூடக் கவிதையில் தமது அர்த்தங்களை இழந்து அசைச்சொல் போல் ஆகி த்வனிகளால் நிரம்பித் தெரிகின்றன ஆக, அர்த்த மதிப்பினால் அல்லாமல் அனுபவ மதிப்பினால் உயிர்த்திருப்பவைதாம் கவிதையின் சொற்கள்.      கவிதையைப் புரிந்து கொள்வதென்பது கவிதையின் அனுபவ மதிப்பை உணர்த்துவதுதான். லா..ரா. சொல்கிறார் 'காண்பதும் கண்டதில் இழைவதுமன்றிக் கவிதையில் புரிய வேண்டியது என்ன இருக்கிறது?'

7.ஒரு வகையில் எதிலும் முழுமையான புரிதல் நிகழும் வாய்ப்பு உண்டோ என்பது சிந்தனைக்குரியது. பிறரைப் புரிந்து கொள்கிறோமா? தன்னைப் புரிந்து கொள்கிறோமா? பேச்சு, எழுத்து, மௌனம் எதன் மூலமாகவும் பூரணமான communication சாத்தியமாவதில்லை, குறிப்பாகக் கவிதையின் communication மேலும் சிக்கலானது. கவிதையில் ஒன்று மற்றொன்றாகவேதான் போய் சேரும். இடம், காலம் கவிஞனுடைய - வாசகனுடைய மன அமைப்புகள் இவற்றுக்கேற்ப வேறு வேறு 'மற்றொன்று' கவிஞனின் உணர்வு அப்படியே வாசகனுக்கு இடம் மாற்றப்படுகிறது என்பது தவறாகிப் போன பழைய நம்பிக்கை ஆழ்ந்திருந்தும் கவியுளத்தை அது ஆழ்ந்திருக்கிறது என்ற அளவில் மட்டுமே  காணலாம். அந்த ஆழம் எத்தகையது என்று கேட்டால் வாசகன் தனது ஆழத்துக்குப்போய், அதைத்தான் பார்த்துக் கொள்ளமுடியும். இவ்வாறு வாசகனை அவனது ஆழத்துக்குள் செலுத்துவே கவிதை பயன்படுகிறது. கவிஞனின் கவிதை வாசகனுள்ளிருக்கும் கவிதையை எழுப்புகிறது. ஆகவே கவிதை மூலம் வாசகன் அடைவது, அவனது சொந்த  அனுபவமே கவிதை மூலம் அவன் காண்பது அவனது கவிதையே படிப்பே படைப்பு ஆகிவிடுகிறது. கவிதை புரிதல் என்பது இப்படித்தான்.

                 'மூளை நரம்பொன்று அறுந்து

                ஓளிவெள்ளம் உள்ளே புகுந்தது

                மனவெளியும் நில வொளியில் குளிர

                செவிப்பறை சுயமாய் அதிர 

                மண்ணில் ஒருபோதும் கேட்டிராத

                ஓசை உவகைகள் எழும்பின

                பாஷை உருகி ஓடிற்று!

 

 

                ஒருசொல் மிச்சமில்லை

               என் பிரக்ஞை

               திரவமாகி

               பிரபஞ்சத்தின் சருமமாய்

               நெடுகிலும் படர்ந்தது

               ஒருகணம்தான்

               மறுகணம்

               லாரியின் இரைச்சல்

               எதிரே காலி நாற்கலி'

 

பசுவய்யாவின் 'வாழும் கணங்கள்' என்ற இந்தக் கவிதையில் ஒருகண நேர உன்னத அனுபவம் சொல்லப்படுகிறது என்பதில் வாசகர் அனைவருக்கும் ஒரே கருத்து இருக்கும். ஆனால் அது என்ன மாதிரி அனுபவம் என்பதில் ஒருவரும் இன்னொரு வரும் ஒன்றுபடமுடியாது. அவரவர் சுயமாக உள்ளே தேட வேண்டியதாகிறது. இந்தத் தேடலில் தன்னுள், இருந்து, தான் காணாதிருந்த 'புதிய' வேறு தளங்களைத் தரிசனம் காண நேரலாம்: மனவிரிவு நேரலாம் புலன்களைச் சம்பந்தப்படுத்தியே புலன்களைத் தாண்டிய அனுபவத்துக்கு அழைக்கிறது கவிதை. அவரவர்க்கு அவரவர் அனுபவம்.

 

8.அடுத்து கவிதையை அணுகும் முயற்சி எப்போது அனுபவப்படுதலில் முடியும் என்ற கேள்வி, அறிவாளி, விமர்சகன் படைப்பாளி போன்றவர்கள் தங்களுள் இருக்கும் அறிவு அனுபவத் தடைகள் தாண்டித்தான் வேறொன்றை அனுக முடியும். வாசிப்பின் தொடக்கமே சிலருக்குச் சிரமம் தந்து விடக்கூடும் கவிதையில் இருப்போ குழந்தைமைக்கு மிக அருகில், அறியாமைக்கு மிக அருகில் பெரியவர்களுக்கு இல்லாத பாவனாசக்தி குழந்தைகளுக்கு உண்டு. ஸ்தூலம் - சூட்சுமம் உண்மைகற்பனை என்று பேதம் படுத்திக் கொள்ளாத- அறிவின் தீட்டுப்படாத சுத்த அறியாமையில் செல்வம் அவர்களுக்கு உண்டு படைப்புச் செயலைக் குழந்தை வினையாட்டோடு இணைத்துப் பேசிய ஃபிராய்டை இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்ளலாம். அதனால் வாசகன் கவிதையைச் சரியாகத் தொடவேண்டுமானால் தனது குழந்தைப் பருவத்துக்குத் திரும்பவது நல்லது. அழுக்கற்ற பிஞ்சு விரல்களால் தொடுவதுதான் கவிதையைப் புரிந்து கொள்வது.

9. ஒவ்வொரு துறை அறிவும் அந்தந்தத் துறைவல்லுநர்களுக்குப் புரியும். அதுபோலக் கவிதையும் அந்தத் துறை வல்லுநர்களுக்குப் புரியும், வல்லுநரின் தகுதி என்ன? கவிதையிடம் தன்னைப் படிக்கக் கொடுத்துவிடும் கள்ளம் கபடமற்ற தூய எளிமைதான்.(nழெஉநnஉந)

11. இன்னுமொன்று புரித்து கொள்ளல் என்பது தீர்மானத்துக்கு வருதல் அன்று. அப்படியே தீர்மானம் ஏதாவது முண்டி எழுந்தால், அது, நம்முடையது: கவிதையுடையது அன்று ஏற்புக்கும் மறுப்புக்கும் இடைவெளியை முற்றிலும் அழித்துவிட்டு நிற்கிறது, கவிதை. இதை உணர்தல் கவிதையை அனுபவப்படுதலாக விளையும் 'ஆம் - இல்லை என்பவைகளைப் பிளவுபடாமல் வைத்துக் கொள முநநி லநள யனெ ழெ nளிடவை;' என்றான் ஒரு கவிஞன்.

12. கவிதை முடிவடைவதில்லை, காலவெளியில் நீண்டு தொடர்கிறது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஞ்ஞானம் இன்று காலாவதியாகிய போதும். சங்கக் கவிதை இப்போதும் நம் வாழ்வியலுடன் தொடர்பு கொண்டு இமைத்துதுக் கொண்டும், உயிர்த்துக் கொண்டும் இருக்கிறது. அதனால் கவிதைக்கும் அதன் புரிதலுக்கும் காலவரம்பு கிடையாது. அன்றன்றைய புரிதலை கவிதை அனுமதிக்கிறது.

13. ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குக் கவிதைnபயரும் போது, வௌ;வேறு கலாச்சரங்கள் சந்திக்கும் போது புரிந்து கொள்ள முடியாமை என்பது அதிக அளவில் இருக்கும். ஜெர்மானிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்த ஒருவர் தாம் மொழி பெயர்த்தவைகளில் பலகவிதைகள் தமக்கு புரியவில்லை என்றார். அதாவது, மொழி பூர்வமான 'அர்த்தம்' புரியவில்லைஅர்த்தம் தாண்டிய அனுபவத்தூண்டுதல் அர்த்தம் தாண்டிய ஒன்றாக மொழி பெயர்ப்பாகியிருக்கிறது.

14. எல்லாரும் வாழும் வெளிச்ச உலகில் பருப்பொருள்களில் சூழலில், பொதுவான கலாச்சாரப் பின்னணியில்தான் கவிஞனும் வாழ்கிறான். ஆனால் கவனது படைப்புலகம் தனியானதொரு அருவ உலகமாக இருக்கிறது. இதே மாதிரித் தனித்தன்மையான மன அமைப்பைக் கொண்ட வசனப்படைப்பாளிகளும் இருக்கிறார்கள். கவிதையில் காணுமளவு இருண்மை அந்த வசனப் படைப்புகளில் காண்பதில்லை. நிகழ்ச்சிகள், பாத்திரங்கள். iர்யாடல்;, பின்னணிக்களங்கள், என்று பருப்பொருள் உலகிடையே இயங்குவதால் அந்தப் படைப்பாளிகளை- படைப்புகளைப் புரிந்து கொள்வது சாத்தியமாகிறது. 'கண்ணாடியில் பிம்பம் விழும் த்வணிக் கூடக் எனக் கேட்கிறது. நீ அதை அறிவாயா?' என்று பேசும் லா..ரா. வின் கதாநாயகனின் உணர்வுகள் கதை முழுதும் விரவியிருப்பதைக் கொண்டு இந்தப் பேச்சின் தன்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது 'வெற்று வெளியில் உருவற்ற பெயnரன சுசீலா நடந்து கொண்டிருந்தாள்' என்று மௌனி எழுதும் போது கதையின் சூழலில் சுசீலாவின் அருவத்தை அடையாளம் கண்டு பிடிக்க முடிகிறது.

 கவிஞனுக்குக் கவிதைக்குள் இந்த மாதிரி வசதிகள் இல்லை. அருவத்தை அருவமாகவே காட்டும் கலையை முதலில் ஏற்றுக் கொண்டால்தான். புரிந்து கொள்ள முயலமுடியும். கவிஞன் வேண்டுமென்றே பருப்பொருள் உலகைத் துறந்திருக்கிறான். அவன் கவிதை, வாழ்வைப் புறக்கணிக்கிறது. வாழ்வுக்கு அப்பாற்பட்டது என்று சொல்வது வாழ்க்கையை ஏதோ சட்டைப்பைப் பொருளாக நினைத்துக் கொள்கிறவர்களின் கூற்று மார்க்சிய விமர்சகரான ஞானி, 'கவிதை எல்லோருக்கும் புரிகிற மாதிரிதான் இருந்து தீர வேண்டியதில்லை. புரிதலுக்கான முயற்சியை உயர் அளவில் செய்தால் தான் மார்க்சியம் புரிகிற மாதிரி, கவிதை, இலக்கியம், நவீன ஒவியம், கர்நாடக சங்கீதம் மேல்நாட்டு இசை முதலியவையும் புரியும்' என்று இத்தகைய கவிதைகளுக்கு ஆதரவாக வாதாடியிருப்பதைக் குறிப்பிட வேண்டும் மார்க்சியப் புரட்சிக் கவிஞரான பாப்லோ நெரூடாவின் 'சாவுதனியாக' என்ற கவிதை வழக்கமான புரிதல் முறைக்கு உட்படுமா என்று பார்க்கலாம்.

'எலும்புகளுள் இருக்கிறது மரணம் - ஒரு தூய ஓசைபோல் - தனது நாய் இல்லாத ஊளைபோல் - சவப்பெட்டிகள் செங்குத்தான மரண ஆற்றில் ஏறிச் செல்கின்றனகல்பதிக்காத, விரலுமில்லாத ஒரு மோதிரம் போல் - கதவைத்தட்ட வருகிறதுஎனக்குத் தெரியாது எனினும் அதன்பாடல்சாவின் முகமும் பச்சை நிறம் - அதன் வெறிப்பும் பச்சை நிறம்'.

 

இந்தக் கவிதை சாவை குறிக்கிறது என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. 'தூய' ஒசை''நாய் இல்லாத ஊளை'; கதவைத் தட்டும் மோதிரம்' என்ற படிமங்கள் மரணம்; கவிஞனுக்கு அனுபவமான விதத்தைதான் குறிக்கின்றன. சாவின் பாடல் ஈர வயலட் பூவின் நிறமுடையது என்பதையும் ,;சாவின் நிறம் பச்சை  என்பதையும் நெருடாவின் உள் மனம் கண்டு கொள்கிறது. மரணம் நம்முள் இதே படிமங்களை கருத்தமைவுகளைத்தான் எழுப்ப வேண்டும் என்பதில்லை .ஆனால் சாவுக்கு ஓசையும் பாட்டும் நிறமும் உண்டு என்பதை நமக்குள் உணர்ந்து ஏற்கிற மனோபாவத்தை இக்கவிதை ஏற்படுத்தி விடுகிறது. நமது புரிதல்' நிகழ்கிறது.

 

(செப்டம்பர் - 2004 தீராநதி இதழில் வெளிவந்த கட்டுரை)

 

கவிதையில் இருண்மை

                                            -அபி

15. புரிந்து கொள்ள முடியாத அல்லது மிகக் கடினமான கவிதையை 'இருண்மைக் கவிதை'(ழடிளஉரசவைல)   என்று வகைப்படுத்துவது வழக்கமாகியிருக்கிறது. பொருள் மயக்கம் (யுஅடிபைரவைலஎன்ற இன்னொரு சொல்லும் புழங்குகிறது. புரியாத கவிதைகள் எல்லாவற்றுக்குமே இது பொருந்துமா என்பதைப் பார்க்க வேண்டும். வழமையான பார்வை உள்ளவர்கள் நவீன படைப்பை அணுக முடியாமலும், சில சமயம் அணுக விரும்பாமலும் இருக்கும் நிலைக்குப் படைப்பாளிகளை காரணமாக்குகிறார்கள். 'நவீன வாழ்வின் குழப்பங்கள், எளிதில் நெருங்க முடியாத அறிவியல் வளர்ச்சி, கலை அன்றாட வாழ்விலிருந்து பிரிந்து நிற்கும் நிலை - இவைகளால் எரிச்சலுறும் கவிஞன் மீதான தன் எதிர்மறையான தீர்ப்பை உணர்த்தும் உத்தியாகவே இருண்மையைப் பயன்படுத்துகிறான்'- இது எஃப். டபிள்யூ. துபீ சொன்னது. 'பல துறைகளிலும் கவிஞன் செலுத்தி வந்த ஆதிக்கம், இன்று வௌ;வேறு தனித்தனித் துறை வல்லுநர்களிடம் போய் விட்டதனால், தனக்;கென்று தகுதியான ஒரு தனித்துறையை நிறுவும் முயற்சியில் கவிதையை இருண்மையாக்கினான்'. இது ஜான் க்ரோவேரன்சம் சொன்னது இந்தக் கருத்துக்கள் 'கவிதையில் இருண்மை என்பது எதிர்மறை நோக்கம் கொண்டது, வேண்டுமென்றே வலிந்து செய்யப்படுவது என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன. இது ரொம்பவும் மிகைப்படுத்தப்பட்ட கருத்து.

16. இருண்மைக்கான நியாயங்களை நவீன வாழ்விலிருந்தும், அறிவுத் துறைகளிலிருந்தும் பிரம்மராஜன் போன்றோர் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள், நடப்புக் கால வாழ்வின் சிக்கல்களால் விழும் முண்டு முடிச்சுகளைச் சிக்கலாகவே வெளியிடுகிறான் கவிஞன் ஒரு கவிதை.

            'இரவு வந்ததும் விடிகாலையின்

             கறுப்புப் பால் அருந்துகிறோம்

             வானத்தில் ஒரு சவக்குழி தோண்டுகிறோம்

             தேவைக்கு அதிகமான இடம் உண்டு அதில்

             வீட்டில் ஒரு மனிதன்

             தான் iரயும் பாம்புகளுடன் விளையாடுகிறான்'

 

பால் செலானின் 'சாவின் சங்கீதம்' என்ற இந்தக் கவிதை ஹிட்லரின் மரணக் கூடாரம் (னுநயவா ஊயஅp) பற்றியது. இந்தப் படிமங்கள் சாவை விளக்காமல் சாவின் பயங்கரத்தை அனுபவப்படுத்துகின்றன. வாழ்வின் இருளை இருள் கொண்டே எதிரொலிப்பவை, இந்த மாதிரிக் கவிதைகள் வாழ்நிலைகளின் சிக்கலை கவிதை பிரதிபலிக்கிறது என்பது உண்மையானால், அந்த வாழ்வை வாழ்வோர்க்கு அக்கவிதை புரிய வேண்டும் தானே என்று கேட்கலாம்கவிஞனது படைப்புலகின் நியதியில் அந்தச் சிக்கல்கள் என்ன விதமான மாற்று வடிவு கொள்கின்றன என்பதைக் கூர்ந்த பார்வையில் தான் உணர முடியும்.

17. புதிய தத்துவக் கண்ணோட்டங்கள், மனோதத்துவ விரிவு,அறிவியல், வாழ்வின் மீது படியும் வித்தியாசமான பார்வைகள்- இவைகளின் நுழைவும் கவிதை கடினமாயிருப்பதற்குக் காரணம் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லாத இசை, ஒவியம், சிற்பம் போன்ற கலைகளின் நுணுக்க விவரங்கள் கவிதைகளுக்குள் ஊடுருவியிருக்கின்றன. இந்த விவரங்களைப் புரிந்து கொண்டால் இந்த கவிதைகள் ஓரளவு புரிந்து விடும். 2 என்ற சூத்திரம் புரிந்தால் அந்தத் தலைப்பில் உள்ள பிரமிளின் கவிதை புரியும். பிராய்டின் அடிமனம் பற்றிய விளக்கங்கள் தெரிந்தால் பிரமிளின் 'அடிமனம்' கவிதை புரியும் 'நில், பின்னால் திரும்பு, திரும்பி நட, இருட்டு, கோடிக்காலக் கூட்டிருட்டு' என்று தொடரும் சி.மணியின் கவிதையில் 'கோடிக்காலக் கூட்டிருட்டு என்னவென்று புரிய வேண்டுமானால் யுங்கின் தொகை நனவிலிக் கோட்பாடு தெரிந்திருக்க வேண்டும். இன்றைய குரூரங்களின் வித்து ஆதிமனிதக் குரூரம் என்பதை உணர்ந்தால், 'மலை யேறுகிற பிள்ளைகள் (தள்ளிவிடு) மண்டை நொறுங்க விழட்டும் அடிவாரத்தில் செம்பருத்தி பூக்கும்' என்ற கலாப்பிரியாவின் கவிதை புரியும்               'உன் பெயர் - இன்று என் உற்சாகங்களை மூடும் வலை - என் காதை அறுத்துத்தரச் சொல்லும் விநோதக் கோரிக்கை' எனும் சுகுமாரனின் கவிதையில் காதறுக்கும் விஷயம் பிடி படவில்லை ஓவிய மேதை வான்கா தன்காதலிக்குத் தன் காதை அறுத்துக் கொடுத்த வரலாறு தெரியும் போது, சுகுமாரனின் கவிதையில் இருண்மை என்று ஒன்றும் இல்லை எனக் காணலாம். இது மாதிரி பிற அறிவுத்துறைத் தொடர்புகள், வெளியுலக விவரங்களின் துணை கொண்டு புரிந்து கொள்ள முடியும் கவிதைகளைக் கழித்து விட்டால் இருண்மைக் கவிதைகளின் அளவு குறையலாகும்.

18. வேறு சில கவிதைகள் வாசிப்பில் மிக எளியவையாகத் தோன்றும், எனினும் ஏதோ ஒரு கணத்தில் வாசகனை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்று சுழற்றி விடும். 'சற்றைக்கு முன் -ஜன்னல் சட்டமிட்ட  வானில் - பறந்து கொண்டிருக்கிறது! ஆனந்தின் இந்தக் கவிதையில் காலம் திடிரென இடமாகக் காட்டப்படுகிறது. காலத்தின் இடம் ஒரு வகை ஸ்தூலமாக அனுபவமாகிறது. ஒரு விதமான உள்தர்க்கம் கவிதையில் செயல்படுகிறது. கவிஞனின் வித்தியாசமான பார்வையில் கிட்டிய அனுபவம். இதற்கு மேல் இந்தக் கவிதையில் என்ன விஷயம், செய்தி? எதுவுமில்லை. இது மாதிரிக் கவிதைகள் மனசை அசைத்துச் சலனப்படுத்துகின்றன. சிந்தனையை; பீடித்திருக்கிற வழக்கமான தர்க்கம் தளர்கிறது. ஒரு சுதந்திரத்தன்மை உண்டாகிறது.

19. படைப்பாளிகள் சிலரின் மிகத் தனித்தன்மையான மன இயக்க படைப்பில் செயல்படும் போது, இந்த இயக்கம் புரியாததன் இருள், கவிதையிலிருந்து எழுந்து வாசனைக் கவிகிறது. நிச்சயமாக மொழி வடிவத்துக்கும் சிந்தனை வடிவத்துக்கும் முந்தைய நுட்ப உணர்வு நிலைகளைக் கவிதையாக்க முயல்கிறான் கவிஞன். அருவமும் மௌனமும் அகாலமும் அகாதமுமாகிய முடிவிலிகள் கவிதைக்குள் பிரவேசிக்கின்றன. அதனால் கவிதை முன் பின் அற்றதாகி விடுகின்றது. ஆராய்ச்சிக்கும் தேடலுக்கும் அகப்படாதவற்றை, கவிஞனே கூடத் துல்லியமாக உணர்ந்திராதவற்றை அவனுடைய உள்ளுணர்வின் துணைகொண்டு கவிதை வெளிக் கொண்டு வருகிறது. நாம் அவன் எழுத்தில் உணரும் இருளை அவனும் தான் உணர்கிறான். அபியின் 'நான் இல்லாமல் என் வாழ்க்கை', 'வடிவங்கள்' போன்ற கவிதைகளில் அருவம் பசித்திருக்கக் காணலாம். 'தன்வாழ்வு' என்பதைத் தன்னிலிருந்து விலக்கி வைத்துப் பார்த்து, அதன் தன்னிச்சை இயக்கங்களைக் காட்டுவதன் மூலம் அதனுள் பொதிந்திருக்கிற வரம்பற்ற ஆனந்த சுதந்திரத்தைக் கவிதை அருவ வடிவமாகவே அனுபவப்படுத்த முயல்கிறது. 'வடிவங்கள்' கவிதை முற்றிலும் பொருள்களிலிருந்து அவற்றின் வடிவங்களைப் பிரித்துக் காணும் முயற்சி. ஆத்மாநாமின் 'இல்லாத தலைப்பு' என்ற கவிதை 'நான்' என்பதன் உண்மையைச் சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டுக் கடைசியில் 'நான் இல்லை' என்று முடிகிறது. தயக்கமாகவேனும் வாசகனைத் தலையசைக்கச் செய்கிறது கவிதை. பொதுவாகவே கவிதைகளில் இடம் பெறும் நான் நீ போன்ற இடப் பெயர்கள் நம் அன்றாட மொழிப் புழக்கத்தில் இருக்கிற நான் 'நீ'க்கள் அல்ல.  என்று கவிஞன் தனக்கு முன்னால் ஒரு சூனிய முன்னிலையைக் காண்கிறான்;. கவிஞனுடைய அபரிதமான சுதந்திரம், எதேச்சையாக அனுபவங்களை இவனுக்குத் தருகிறது. மர்ம முடிச்சுகள் என்றாலும் அவை நமக்கு நமது போக்கில் அனுபவமாகாதிருப்பதில்லை.                        இந்தத் தரத்துக் கவிதைகள் பற்றி டி.எஸ். எலியட், 'நாம் உள்நுழைந்து பார்க்காத நமது இருப்பின் அடி ஆழத்தை உருவாக்குவதாகிய, ஆழ்ந்த, பெயர் கூறப்படாத உணர்ச்சிகளைப் பற்றிய உணர்வைக் கவிதை நமக்கு அடிக்கடி எழுப்பலாம்' என்று விளக்குகிறார். பிரமிளின் 'உன் (பெயர்) என்ற கவிதை                                       'சீர்குலைந்த சொல்லொன்றுதன் தலையைத் தானே விழுங்கத் தேடிஎன்னுள் நுழைந்ததுதுடித்துத் திமிறிதன் மீதிறங்கும் இப்பெயரின் முத்தங்களைஉதறி உதறி அழுதது இதயம் - பெயர் பின் வாங்கிற்றுஅப்பாடா என்று அண்ணாந்தேன் - சந்திர கோளத்தில் மோதியதுஎதிரொலிக்கிறது. இன்று, இடையறாத உன் பெயர்நிலவிலிருந்திறங்கிஎன்மீது சொரியும் ஓர் ரத்தப் பெருக்கு' - இங்கே 'உன், என்'- யார்? 'சொல், பெயர்' – என்ன? 'ரத்தப் பெருக்கு' –ஏன்? காதல்? - இருக்கலாம், வேறேதேனும் உறவு? - இருக்கலாம். புறத்திலிருந்து அகத்தினுள் புகுந்த ஏதோ கலவரம்? இருக்கலாம்தான் படிமங்கள் அனைத்திலும் எலியட் சொன்ன பெயர் கூறப்படாத உணர்ச்சி நிலவிக் கொண்டிருப்பதை உணரலாம்.

20. அறியாமை என்பதை அறிவின் எதிர்ப்பதம் என்று வைத்திருக்கிறோம் உண்மையில் அறிவைத் தூண்டுவதும், அறிவால் துலக்கமாவதும் அறியாமை அறிவின் திருப்பங்களில் நின்று பார்க்கும் போதெல்லாம் எட்டித் தெரியும் அடிவானம்தான் அறியாமை. 'அறிதோறு அறியாமை கண்டற்று' என்று வள்ளுவர் இதை அழகாகச் சொன்னார். இந்த இருள் இந்த தெளிவின்மை படைப்பின் ஊற்று .கவிதைக்கு மிக அருகில், மானுட வாழ்வின், பிரபஞ்சத்தின் அநாதிகள் குவிந்து கிடக்கின்றன. அதனால், கவிதையின் இருண்மை என்பது வாழ்வின் இருண்மைதான். 'இருளென்பது குறைந்த ஒளி' என்றார் பாரதி. அதுதான் இருளைக் காணச் செய்கிறது உண்மயான கவிஞன் செயற்கையாக இருண்மை காட்டுவதில்லை. பத்திரிகைச் செய்தித் தலைப்புகளின் வெட்டுத் தொகுப்பைக் கவிதையாகக் காட்டுவது போன்ற துடுக்குத் தனங்களைச் சம்பந்தப்பட்ட கவிஞர்களின் சோதனை முயற்சியாகக் கொள்ளலாமேயன்றி இருண்மையின் அடையாளங்களாக அவற்றை நாம் அங்கீகரிக்க மாட்டோம்.

21. இனி, கவிதை மற்றும் விமர்சனத்தின் புதிய பிரிவு ஒன்றை  தொடாமல் இந்தக் கட்டுரையை முடிக்க முடியாது. 'பன்முகப் பொருளாக இருக்கிற இலக்கியத்துக்கு முழுமையான அர்த்தம் என்று ஒன்றுமே கிடையாது. இலக்கிய பொருளின் மீது அர்த்தத்தை இடுவது என்பது, நம்மைநாமே சிறைப்படுத்திக் கொள்வதாகும், இலக்கியம் பொருள் ஏற்படுத்தித் தரும் பரத்த வெளியில் அலைந்து, திரிந்து, உடைத்துக் கொண்டிருப்பதே இந்தச் சிறையிலிருந்து நம்மை நாமே மீட்டெடுத்துக் கொள்ளும் புரட்சிகரச் செயல்பாடாகும் என்று ரோலான் பார்த் காட்டிய வழியில் பிரம்மராஜன் சிலவற்றைக் கட்டுடைத்து 'அர்த்தம்' கொள்ள  வைக்கிறார் நாகார்ஜீனன் இது அமைப்பியல் வழிமுறை.   'கலை உளி துயில் கல்' என்ற கவிதை 'நீங்கள் அறிந்த பாடலின் பாடலை - நிலாஅற்புத பொற்பத நிமிஷ அருகாமையை புரிந்தில்லை நீங்கள்கலை உளி துயில் கல் - சுக்கலாகிய மிகச் சி;க்கலான விபத்தைநீங்கள் - நினைப்பதில்லைஅமைதியின் அமைதியைசுமையின் சுமையைமனதில் மனதை.

22. இதைக் கட்டுரைக்கிறார் விமர்சகர்: 'அறிந்த பாடல் புரிந்த ஓவியம் மகிழ்வுசிலைகேட்கிறோம் பார்கிறோம் புரிகிறோம் நினைக்கிறோம் - நிலா ஈர்ப்புக் கடல் அலை அற்புதப் பொற்பதச் சிலைசுக்கலாகிய மலைகல்லுளிக் கலைபாடலின் பாடல் அமைதியின் அமைதி சுமையின் சுமை மனதில் மனதுகேட்பதில்லை பார்பத்தில்லை புரிந்ததில்லை நினைப்பதில்லைசிக்கலாகிய விபத்துகளிதுயில் கலைவேறு வேறு இடங்களிலிருந்து சொற்களை வெட்டி ஒட்டிக் கொடுக்கிறார். 'கலை வடிவத்தை நாமறியோம் நம் நிலை என்ன களிதுளிலா? என்று ஒட்டுமொத்தக் கருத்துரையும் தருகிறார்.

 

23.. அமைப்பியல், பின் நவீனத்துவம் ஆகிய கோட்பாடுகள் பலர் புரிந்து கொள்ளாதவை. எனினும் மேற்காட்டிய உடைத்தலைப் பொறுத்துச் சில கேள்விகள் எழக்கூடும். பிரித்து, ஒட்டி வௌ;வேறு வகையாகப் பொருள் காணக்கூடும் என்றால், கவிஞர் பிரக்ஞை  பூர்வமாக, முதலில் எளிதாயிருந்ததைப் பிரித்து வேறு வேறு இணைப்புகளில் பொருந்தினார் என்று எண்ணத் தோன்றுகிறதே! இது சரியா? நச்சினார்க்கினியரின் மாட்டேறு உத்தியைப் பெரிதுபடுத்தியது போலிருக்கிறதே? கவிதை முழுமையாகச் சொற்கட்டுக்குள் வாசகனை அலைக்கழிக்கிறதே, அதுதான் அவனுக்குக் கிட்டும் அனுபவமா? கவிதைக்கு அர்த்தப்படுத்துவதற்காகப் பெரும் பிரயாசை எடுத்துக் கொள்கிற விமர்சகரின் நோக்கம் என்ன? கவிதையின், கவிஞனின் குறைபாடு இங்கே ஒன்றும் இல்லை பிரம்மராஜனின் உண்மையான தீவிரத் தன்மையை உள்வாங்கிக் கொண்டு, அவரது கவிதைகளை நெருக்குவதற்காக அணுகல் முறையை இன்னும் எவரும் எடுத்துக் காட்டவில்லை என்பதே உண்மை. ஆகவே இக்கவிதைகளின் புரிதலுக்காகக் காத்திருப்பதில் அலுப்படைய வேண்டியதில்லை.

இருளை விளக்கும் எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்திய பிறகும் புரியாதவை இருந்தே தீரும்: புதிய வழிமுறைகளைக் காலம் உருவாக்கித்தரும். வாழ்க்கை புரியவில்லை என்பதும் கவிதை புரியவில்லை என்பதும் சமமான வருத்தங்களே. கவிதை அழகுணர்ச்சிக் கிளர்ச்சிகளை மட்டுமே நோக்கமாகக் கொண்ட தன்று. மானுட அனுபவத்தின் கணக்கற்ற நிறுத்துவதுமாகிய இயக்கம் கவிதைக்குரியது. ஆகவே அதைப் புரிந்து கொள்ளும் ஆர்வமும் முயற்சியும், மனிதனுடைய கடமைகளாகின்றன.  

 

  

 

   

 

 

  

 

 

 

 

 

 

 

 

 

 

வித விதமாத் தொய்யுலகம்

  கவிஞர்   அபி   படிமக்கவிதைகளின்   பிதாமகர்   என   உணரப்படுகிறவர்.   கவிஞர்   எட்டாத   தூரத்தில்   நின்று,   வாசகனைப்   போல்,   ஞாபகமாய்,  ...