ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

டாக்டர் கா செல்லப்பன் அவர்கள் பார்வையில்.... கவிஞர் அபி கவிதை

டாக்டர் கா செல்லப்பன் அவர்கள் பார்வையில்.... கவிஞர் அபி கவிதை


 நம்மையறியாமலேயே நம் வழிமரபு தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. அபியின் 'அந்தர நடை' யிலும் இத்தகைய அமைப்பையும் சொல்லாட்சி யையும் பார்க்க முடிகிறது. " வண்ணங்கள் பற்றிக் கொண்டு வெறும் கரும் புகையுடன் எரிகின்றன" என்கிற போது வசனத்தின் அடக்கத்தில் ஒரு ஆழ்ந்த கற்பனையைப் பார்க்கின்றோம். 

பக்கம்-  120

 நூல் - "இலக்கியத்தில் பழம்புதுமையும் புதுப்பழமையும்"

சனி, 7 செப்டம்பர், 2019

கவிஞர் அபி கவிதை குறித்து சிற்பி

மின்னல் கீற்று நூலில் கவிஞர் அபி கவிதை குறித்து     சிற்பி

"புதுக்கவிதை விம்மி விளைவதற்கு நவனவமான சொல்லாக்கங்களின் புதுப்பாய்ச்சல் ஒரு காரணம். கவிஞர் அபியின் ' நிசப்த நெரிசல்' பரணனின் 'வெந்துயர் முள் மனவேலி' தமிழன்பனின் தண்ணீரால் வெறுக்கப்பட்ட தாகங்கள் ' ரகுமானின் உலோகப்பறவை' ரவீந்தீரனின் 'ஊசிமழைப் போர் முனை' இவையெல்லாம் சொல்லாக்க வீச்சுக்கு பதச் சோறாகக் கொள்ளலாம்.

பக்கம் 04-05

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது

 


 

2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மூத்த கவிஞர் அபி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அபி அவர்களை நேரில் சந்தித்து மூன்று மாதம் முன்னரே இச்செய்தியை அறிவித்தோம்.


அபியின் இயற்பெயர் ஹபிபுல்லா.  மேலூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். லா.ச.ரா படைப்புகளில் முனைவர் பட்டம் பெற்றவர். ரூமி, கலீல் கிப்ரானின் கவிதைகளிலிருந்து தன் அழகியலைப் பெற்றுக்கொண்டார். பின்னர் மேலும் செறிவானதும் பூடகமானதுமான கவிதைகளுக்குள் சென்றார்

அபி எழுதிய

1. மெளனத்தின் நாவுகள். (1974)
2. அந்தர நடை (1978)
3. என்ற ஒன்று (1987)
4 அபி கவிதைகள் 20013

என்னும் நான்கு கவிதைத் தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. அபியின் கவிதைகளைப் பற்றி நான் 2000 த்தில் மிக நீண்ட ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன். என்னுடைய ‘உள்ளுணர்வின் தடத்தில்’ என்னும் நூலில் அக்கட்டுரை உள்ளது

அபி அவர்களுக்கு விருது வழங்கும் விழா டிசம்பர் 29 அன்று கோவையில் நிகழும். நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம்

அபி கவிதைகள் வாங்க…


கவிஞர் அபி நேர்காணல் 1
கவிஞர் அபி நேர்காணல் 2
கவிஞர் அபி நேர்காணல் 3

நன்றி:

https://www.jeyamohan.in/124281#.XWQBTWRS_cs


 

abi kavithaigalக்கான பட முடிவுகள்

https://ta.wikipedia.org/s/7w1b அபி

 1.  

  அபி (கவிஞர்)

  கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  Jump to navigation Jump to search
  அபி
  பிறப்பு1942
  போடிநாயக்கனூர், தமிழ் நாடு, இந்தியா
  தேசியம்இந்தியன்
  பணிபேராசிரியர், கவிஞர்
  பணியகம்அரசு கல்லூரிகளில் பணியாற்றி மேலூர் அரசுக் கலைக் கல்லூரியில் ஓய்வு பெற்றவர்
  பிள்ளைகள்மகன்கள் அஷ்ரப் அலி, ரியாஸ் அஹ்மது. மகள் பர்வின் பாத்திமா[1]
  வலைத்தளம்
  http://abikavithaiulagam.blogspot.com
  அபி என்ற பீ. மு. அபிபுல்லா (பிறப்பு: 1942) என்பவர் தமிழ்க் கவிஞராவார். இவர் 2019 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருதினைப் பெறுகிறார்.[2] தமிழில் அருவக் கவிதைகளுக்குக் கவனிக்கப்பட்ட புதுக்கவிஞராவார்.[3] இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.[1]

  வாழ்க்கை

  1942 ஆம் ஆண்டு போடிநாயக்கனூரில் பிறந்தவர். லா.ச.ராவின் நாவல் உத்திகளை ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றார்.[4] மேலூர் அரசுக் கலைக்கல்லூரில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

  இவரது நூல்கள்

  1. மெளனத்தின் நாவுகள் (1974) - கவிஞர் மீரா அவர்களால் அன்னம் பதிப்பகம்[5]
  2. அந்தர நடை (1978)
  3. என்ற ஒன்று (1987)
  4. அபி கவிதைகள் (2013) - கலைஞன் பதிப்பகம்

  விருதுகள்

  • 2004: கவிக்கோ விருது
  • 2004: கவிக்கணம் விருது
  • 2008: கவிஞர் தேவமகள் அறக்கட்டளை விருது[1]
  • 2011: சிற்பி இலக்கிய விருது[6]
  • 2019: விஷ்ணுபுரம் விருது[2]

  மேற்கோள்கள்


 2. "கவிதை படிப்பது என்பது ஏதோ மலையைப் பிளக்கும் செயலல்ல !". தீராநதி. ஆகஸ்டு 2009. பார்த்த நாள்: 30 July 2019.

 3. "கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது". பார்த்த நாள் 30 July 2019.

 4. 6.2 இக்காலச் செய்யுள் இலக்கியங்கள். த.இ.க..

 5. "கவிஞர் அபி – நேர்காணல்". சமரசம். ஜனவரி 2000. பார்த்த நாள்: 30 July 2019.

 6. "கவிஞர் மீரா". தென்றல். பார்த்த நாள்: 30 July 2019.

 7. "சிற்பி இலக்கிய விருதுக்கு கவிஞர்கள் தேர்வு". தினமலர். பார்த்த நாள்: 30 July 2019.

 https://www.jeyamohan.in/125013#.XWPqvWRS_ct

அபி கவிதைகளின் வெளியீடு – கடிதங்கள்

மதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

நான் கலிஃபோர்னியாவிலிருந்து பூவேந்திரன் எழுதுகிறேன்.

கவிஞர் அபி அவர்களுக்கு இவ்வாண்டுக்குரிய விஷ்ணுபுரம் விருது அளிப்பதன் மூலம் அபியின் கவிதைகளை பலர் வாசிக்க அறிமுகப்படுத்தி  இருக்கிறீர்கள்.  நன்றி.

நான் 1982-1985 மேலூர் அரசு கலைக்  கல்லூரியில் கணிதம் படித்தேன்.  எனக்குத் தமிழ்ப் பாடம் நடத்தியவர் அபி சார்.  மிகவும் வித்தியாசமான தமிழ் ஆசிரியர்.  கடினம் என மாணவர்கள் ஒதுங்கும் யாப்பிலக்கணத்தை அவர் நடத்திய விதம் என்னை / எங்களை மிகவும் கவர்ந்தது; எளிதாக இருந்தது.  அதே நேரம் அடுத்தடுத்து தொடரும் கணித விதிகளை நினைவு படுத்துவது போலும் இருந்தது.  பிறகு எனக்கு அவர் சொல்லி தெரிந்த உண்மை – தமிழின் மீது இருந்த பற்றின் மீது காரணமாக அவர் தமிழைப் படித்து இருந்தாலும் கணிதத்தின் மீது அவருக்கு ஆர்வம் இருந்து இருக்கிறது.  ஆனால் அவரால் இயலாது என விட்டுவிட்டு இருக்கிறார்.  பி.ஏ வகுப்பில் அவர் Astronomy படித்து இருக்கிறார்.  கணிதத்தில் அவரை கவர்ந்த விஷயம் ‘முடிவிலி ‘.  அது பற்றி அவர் பேசுவார்.

அவர் நடத்திய யாப்புக் குறிப்புகளை 20 வருடங்கள் பாதுகாத்து வைத்திருந்தேன் … அந்த அளவு யாப்பில் தேர்ந்தவராக இருந்தாலும் யாப்பை ஒதுக்கிவிட்டு அவர் கவிதைகள் படைத்தது ஆச்சரியம்தான்.   நண்பர் அய்யனாருக்கும் எனக்கும் நூலகத்தில் இருந்து நவீன இலக்கியங்களை எடுத்துக் கொடுத்து அறிமுகம் செய்தவர் அபி சார்.  பாலகுமாரன், சுஜாதா, சிவசங்கரி என்ற மாதிரியில் வாசித்து வந்தேன்.  அதிக பட்சம் நான் படித்த தரமான எழுத்தாளர் ஜெயகாந்தன்.  என்னை புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், வெங்கட் சாமிநாதன், மாப்பஸான், கலீல் கிப்ரான் என்று அவர் திசை மாற்றினார்.  அவர் கவிதை தொடர்பாக நான் பேசியதில்லை.  ஒருவகை தயக்கம், ‘ உனக்கு புரிந்தபடி உன் போக்கில் போ’ என்று சொல்லுவார்.

முதல் முறையாக அவர் வீட்டில் அவருடன் பேசிக்கொண்டு இருந்த பொழுது டைம்  பீஸ் அலாரம் அடித்தது.  “ஒரு நிமிடம் – விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஆரம்பிச்சு இருக்கும், எப்படி போய்க்கிட்டு இருக்குது என்று பாத்துக்கிறேன்” என்றார்.  விளையாட்டின் நுணுக்கங்கள் தெரிந்து வைத்து இருந்தார்.  இது நான் எதிர் பாராதது.

நான் 2007-ல் ஜெர்மனியில் இருந்த பொது அவருடைய மூன்று தொகுப்புகளை இணையத்தில் http://abikavithaigal.blogspot.com வெளியிட்டேன் (அச்சுப் பிழைகளுடன்).  பிறகு வேளைப்  பளு, நாடோடி வாழ்க்கை – அதைத் தொடர முடியாமல் போனது, அதன் பின் அவருடைய தமிழ் மாணவர் சந்திரசேகரன்  http://abikavithaiulagam.blogspot.com என அபி அய்யாவின் கவிதைகளை வெளியிட்டு இருக்கிறார்.

நான் அவருடைய எழுத்தைப் பற்றி எதுவும் எழுதவில்லை.  வாசித்து உள்வாங்கிக் கொண்டவர்கள் நிறைய எழுதுவார்கள்.  அவரால் தமிழ் ஆர்வம் பெற்ற நான் அமெரிக்காவில் இன்று என் பணியோடு கூடுதலாக – அவ்வை தமிழ்ப்  பள்ளிக்கு முதல்வராகவும் இருந்து வருகிறேன்.
அபி சாருக்கு என் வாழ்த்துக்கள்.  விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்க்கு என் நன்றிகள்.

அன்புடன்

பூவேந்திரன்அன்புள்ள பூவேந்திரன்,

நீங்கள் உங்கள் ஆசிரியருக்காகச் செய்திருப்பது மிகப்பெரிய பணி. நிறைவாக உணர்கிறேன். இன்றைய சூழலில் அச்சு ஊடகத்தில் கவிதை போன்ற அரிய படைப்புக்கள் காணாமலாகிவிடுகின்றன. இணையம் அவற்றை ஒருவகையில் அழிவற்றதாக்குகிறது. அந்த பிளாக்ஸ்பாட் அழியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்

வித விதமாத் தொய்யுலகம்

  கவிஞர்   அபி   படிமக்கவிதைகளின்   பிதாமகர்   என   உணரப்படுகிறவர்.   கவிஞர்   எட்டாத   தூரத்தில்   நின்று,   வாசகனைப்   போல்,   ஞாபகமாய்,  ...