செவ்வாய், 22 ஜூலை, 2014

கவிஞர் அபி குறித்த பதிவு :

  "பாலாவின் "   தமிழ் இலக்கியத்தின் படைப்புப் பின்புலம்  நூலில் கவிஞர் அபி குறித்த பதிவு  :

புதுக்கவிதை  இளையோரின்  முயற்ச்சியாக  சிறுபத்திரிக்கைகளின் தயவில்
வளர்ச்சி பெற்றது. இதில் குறிப்பிடத்தக்கவை 'மணிக்கொடி','எழுத்து','கசடதபற' ,'வானம்பாடி' போன்ற  இதழ்களைச் சொல்லலாம் .கருத்தின் நிலையிலும்,
உக்திப் பயன்பாட்டிலும் புது வகை படைப்புச்  சக்தியை புதுக் கவிஞர்கள் வெளிப்படுத்தினர். 'மணிக்கொடி'  இதழ்  கு.பா.ராஜகோபாலன், வல்லிக்கண்ணன், ந.பிச்சமூர்த்தி போன்றோர்  படைப்புகள் சிறப்பாக எடுத்துக்  காட்டின. சி.சு.செல்லப்பாவின்  எழுத்துப் பத்திரிக்கையில்
தருமு சிவராமு,  நகுலன், பசுவய்யா, சி.மணி போன்றோர் சிறப்பாக வெளிப்பட்டனர்.  கசடதபற இதழில் 1973-73 காலத்தில்  ஞானகூத்தன், கலாப்பிரியா, நீலமணி ஆகியோர் தங்களின் படைப்புகளை வெளியிட்டனர்.
புதுமை தன்மைக்கு "கசடதபற " முதன்மை தந்தது. வாழ்க்கை அனுபவங்கள்
கவிதைகளாக வரையப் பட்டன.1970-ல் வெளிவந்த 'வானம்பாடி ' இயக்கம்
சமூக உணர்வுடன் கவிதை எழுதுவதை ஆதரித்த சிற்பி, மு.மேக்தா, புவியரசு,
தமிழன்பன், தேனரசன், பாலா, தமிழ்நாடன் போன்றோரின் கவிதைகள்
வானம்பாடியில் வெளிவந்தன.தமிழன்பன், மீரா, அப்துல்ரகுமான், அபி போன்ற கவிகளின் படைப்புகள் திராவிட இலக்கியத்திலிருந்து நகர்ந்து புதுப் படைப்புச் சக்தி நோக்கியதாக அமைந்தன.1980-களுக்குப்  பிறகு பெண் கவிஞர்கள்,ஹைக்கு கவிஞர்களின் வரவு நேர்ந்தது.

பக்கம் :18
தமிழ் இலக்கியத்தின் படைப்புப் பின்புலம்
பாலா
அன்னம் வெளியீடு அக்-2013
தஞ்சாவூர்.
 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிந்தோடும் காலம் - ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

     சிவஞானபோதத்தின் சூத்திரங்கள் வரிசையாக நம் ஆன்மா அறியும் ஒவ்வொன்றாக சொல்லி வருகிறது. சத்து, அசத்து என்ற இரண்டினை பிரித்தறியும் அறிவை பெற...