ஞாயிறு, 6 டிசம்பர், 2020

டாக்டர் அபிபுல்லா நடத்திய குறுந்தொகை

 

டாக்டர் அபிபுல்லா நடத்திய குறுந்தொகை

---வல்லரசி.

குமுதத்தில் சங்க இலக்கியத்தை தொடர்பு கொண்ட சிறுகதை ஒன்றை படித்தேன். நான் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ தமிழ் இலக்கியம் படித்தபோது எங்கள் பேராசிரியர் டாக்டர் அபிபுல்லாநடத்திய குறுந்தொகை அழகை நினைத்துப் பார்த்தேன்.

பெரிதும் மகிழ்வாக இருந்தது.அவருக்கென்று ரசிகர் கூட்டமே இருக்கும்.அவர் வகுப்பறைக்குள் நுழைந்தால் அவ்வளவு அமைதி நிலவும் 

.நள்ளன்றன்றே யாமம் என்று தொடங்கும் குறுந்தொகைப் பாடலுக்கு அவர் தந்த விளக்கத்தை இன்றும் நினைத்தால் நெல்லிக்காயைச் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் கழித்து தண்ணீர்  குடித்தாலும் இனிக்கும் சுவைபோல் இன்றும் இனிக்கிறது.

இலக்கணத்தை இலக்கியம் போல் இனிமையாக நடத்துவார்.பாடம் நடத்தும் ஆசிரியரைப் பிடித்தால் அவர் நடத்தும் பாடமும் பிடிக்கும் என்ற உளவியல் சிறுவயதிலேயே எனக்குப் புரிந்தது.டையும் ஷூவுமாக அவர் வகுப்பறைக்குள் நுழையும் தோற்றம் ஆங்கிலப் பேராசிரியரையும் வென்றுவிடும் 

அவரது மெளனத்தின் நாவுகள் என்ற கவிதைத் தொகுப்பு அற்புதமான நூல்.என் உள்ளம் கவர் பேராசிரியரின் புகழ் வாழ்க.இரவுக்கு நள் என்ற ஓசை உண்டென்ற  சங்கப் புலவனின் கருத்தை நிறுவிய பேராசிரியர் அபி இன்றும் என் உள்ளத்தில் சங்க இலக்கியமாக வாழ்கின்றார்

 இவருக்கெல்லாம் செம்மல் விருது தேடி கொடுக்கப்பட வேண்டும்.


டாக்டர் அபிபுல்லா இவர் குறித்து...

(சேலத்தில் 1970-73 இல் என்னிடம் பயின்ற மாணவி.அண்ணாமலையில் பணியாற்றி  ஓய்வு பெற்றவர். பெயர் வல்லரசி.)கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிந்தோடும் காலம் - ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

     சிவஞானபோதத்தின் சூத்திரங்கள் வரிசையாக நம் ஆன்மா அறியும் ஒவ்வொன்றாக சொல்லி வருகிறது. சத்து, அசத்து என்ற இரண்டினை பிரித்தறியும் அறிவை பெற...