புதன், 13 ஆகஸ்ட், 2014
கவிஞர் அபி கவிதை குறித்து அறிஞர்  ந.சுப்பு ரெட்டியார் கருத்து ;

"ராப்பிச்சைக்காரன் "என்ற 'அபி'யின் கவிதையில் காமம் என்ற பாலுணர்ச்சி ராப்பிச்சைக்காரன் என்ற குறியீடாக அமைகின்றது.கவிதையில் ராப்பிச்சைக்காரனைப் பற்றிப் பேசுவதெல்லாம் காம உணர்ச்சியைப் பற்றிப் பேசுவதே யாகும் ராப்பிச்சைக்காரன் சரியான புறவயத் தொடர்பாக அமைந்து அருவருக்கச் செய்யும் காமத்தை அதன் முழு விகாரங்களுடன் காட்டும் ஓர் ஆளாக அமைந்து விடுகின்றான்.இனிக் கவிதையைக் காண்போம்.

இரவு வந்ததும் காம உணர்வுகளுக்கு ஆளாகித் தன்னை அழித்துக் கொண்ட மனிதன் இறுதியில் எதுவும் ஆகாத நிலையில் அலுத்துப் போய்ப் பாடுகின்றான்.அன்றும் அந்த அலுப்பிற்குப் பிறகே பாடுகின்றான்;கண் கேட்டு சூரிய நமஸ்காரம் செய்வது போல் கெட்ட பின்பு தான்  உதயம்  .


"போ போ போய் விடு   
போ போ போய் விடு   
ராத்திரிப் பிச்சைக் காரனே " 

பாட்டுத்திறன் -(நூல் )
 ந.சுப்பு ரெட்டியார்
 பக்.433

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக