புதன், 13 ஆகஸ்ட், 2014

கவிஞர் அபி கவிதைகள் குறித்தும் ,அபி அவர்கள் குறித்தும் .....

http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60503111&format=html&edition_id=20050311

தொடரும் கவிதைக் கணம்

லதா ராமகிருஷ்ணன்(மே 29 அன்று சென்னையில் நடைபெற்ற கவிதைக்கணம் ஆண்டு விழாக் கூட்டம் பற்றி சில பகிர்வுகள்)


"இத்தனை வருஷங்களில் எனக்கு கிடைக்கும் முதல் விருது, பாராட்டு இது தான். இது கூட எனக்கு ஆச்சர்யம். இதுவே கடைசி விருதாகவும் அமையக் கூடும் என்று நினைப்பது தவறு என்று எனக்குத் தோன்றவில்லை. எனக்கு தகுதி நிறைய இருப்பதாகவும், அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நான் ஆதங்கப்படுவதாகவும் தயவு செய்து நினைக்காதீர்கள். இன்று எனக்கு எந்த ஆதங்கமும் இல்லை. சொந்த வாழ்க்கையில் எனக்கு நேர்ந்தவைகளுக்காக வருந்தியிருக்கிறேன். எழுத்து வாழ்க்கையில் எனக்கு நேராதவைகளுக்காக நான் கவலைப்படவேயில்லை.

என் ஆசை என்று எதுவும் இல்லை என்றாலும் என் கவிதைகளின் ஆசையை மதிக்கிறேன். அவை ஆழ்ந்த வாசிப்புக்கு ஆசைப்படுகிறன. வெற்றிடத்திலும், மெளனத்திலும் அவை இயங்கும் இயக்கம் கவனிக்கப்பட வேண்டும் என ஆசைப்படுகின்றன. ஒன்று சொல்லாதிருக்கிற, ஒன்றும் இல்லாதிருக்கிற அவற்றின் எளிமை உணரப்பட வேண்டும் என ஆசைப்படுகின்றேன் ".


சமீபத்தில் நடந்தேறிய (மே 29 அன்று) கவிதைக்கணம் ஆண்டு விழாக் கூட்டத்தில் `கவிதை கணம்` விருது பெற்ற மூவரில் -கலாப்ரியா, ஆர்.ராஜகோபாலன், அபி - உடல்நிலை காரணமாக நேரில் வர இயலாத கவிஞர் அபி-யின் ஏற்புரையில் இடம் பெற்றிருந்த சில வரிகளே  மேலே தரப்பட்டிருக்கின்றன.


வெறும் நினைவுக்கேடயம் மட்டுமே என்றாலும் சக கவிஞர்கள் மத்தியில் அதைப் பெற்றுக் கொள்ளும் சந்தோஷத்திற்காக கவிஞர் கலாப்ரியா தென்காசியிலிருந்து கிளம்பி வந்திருந்தார். `அபி`யின் மொத்தக் கவிதைகளும் கலைஞன் பதிப்பகத்தால் ஒரு முழுத் தொகுதியாக வெளியாகியுள்ளன. அவற்றைப் படிக்கும்போதே அந்தக் கவிஞனின் வீச்சையும், ஆளுமையையும் உள்வாங்கிக் கொள்ள முடியும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிந்தோடும் காலம் - ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

     சிவஞானபோதத்தின் சூத்திரங்கள் வரிசையாக நம் ஆன்மா அறியும் ஒவ்வொன்றாக சொல்லி வருகிறது. சத்து, அசத்து என்ற இரண்டினை பிரித்தறியும் அறிவை பெற...