ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

   கவிஞர் அபிக்கு,  "சிற்பி இலக்கிய விருது' --தினமலர் செய்தி

     இந்தாண்டுக்கான (2011)"சிற்பி இலக்கிய விருது' கவிஞர்களான
 அபி, லீனா மணிமேகலை ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.கவிஞர் அபி(எ) அபிபுல்லா, "மவுனத்தின் நாவுகள்', "அந்தர நடை' உள்ளிட்ட கவிதை நூல்களையும், கவிஞர் லீனா மணிமேகலை "ஒற்றை இலை', "உலகின் அழகிய பெண்' உள்ளிட்ட கவிதை நூல்களையும் படைத்துள்ளனர். இவர்களின் மொத்த படைப்புகளுக்காக விருது அளிக்கப்படுகிறது. மேலும், "சிற்பி இலக்கிய பரிசு' "என் வீட்டுத் திண்ணை' நூலுக்காக கவிஞர் சென்னிமலை தண்டபாணிக்கும், "பெரிய புராணம் புதுக்கவிதை' நூலுக்காக கவிஞர் சத்தியமோகனுக்கும் அளிக்கப்படுகிறது. இரண்டு விருதுகளுக்குரிய ரொக்கபணமும், பாராட்டு சான்றிதழும் வரும் 31ல் நடக்கவிருக்கும் "சிற்பி பவள விழா'வில் வழங்கப்படும்.

 நன்றி:
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=273479&Print=1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிந்தோடும் காலம் - ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

     சிவஞானபோதத்தின் சூத்திரங்கள் வரிசையாக நம் ஆன்மா அறியும் ஒவ்வொன்றாக சொல்லி வருகிறது. சத்து, அசத்து என்ற இரண்டினை பிரித்தறியும் அறிவை பெற...