ஞாயிறு, 22 மார்ச், 2015

எதன் முடிவிலும் . . .நினைக்க நினைக்க
நா ஊறீற்று
பரிக்கப் போகையில்

ஓ, அதற்கே எவ்வலவு முயற்சி!
இரண்டு சிறகுகள்
இங்கே கொண்டுவந்துவிட,
யார்யாரோ கொடுத்த
கண்களைக்கொண்டு வழிதேடி,
இடையிடயே காணமல்போய்,
என்னைநாணே
கண்டுபிடித்துக் கொண்டு
கடைசியில்
மங்களான ஒருவழியில்
நடந்தோ நீந்தியோ சென்று சேர்ந்து
முண்டுமுண்டாய்ச்
சுளுக்கிக்கொண்டு நிற்கும்
அந்த மரத்தில் என்னை ஏற்றி
அதை பறிக்கச் செய்து

ஏரிய நானும்
கீழ்நின்ற நானும்
நாவில் வைத்தபோது
குடலை கசக்கும் கசப்பு

கீழே எரிந்துவிட்டு
மறுபடி நினைத்தால்
நினைக்க நினைக்க
நா ஊருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிந்தோடும் காலம் - ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

     சிவஞானபோதத்தின் சூத்திரங்கள் வரிசையாக நம் ஆன்மா அறியும் ஒவ்வொன்றாக சொல்லி வருகிறது. சத்து, அசத்து என்ற இரண்டினை பிரித்தறியும் அறிவை பெற...