ஞாயிறு, 22 மார்ச், 2015

குரல்கள்


தொலைதூரத்தில்
குரல்கள்.
தொடநீளும்
பிளந்த நாவுகள் போல்

எனினும்
எட்டாதிருக்கிறேன்

தூக்கம் கலைந்து
திடுக்கிட்டெழுந்து
உட்கார்ந்தால்
இரைச்சல்கள்
முட்டிமோதி வருவதெனக்
காணும்

விலக்கிவைத்தால்
விடுமா என்னா?

கசப்பு இனிப்பு வெறுப்பு விருப்பு
அன்பு....
நானேயிட்ட  பெயர் சுமந்து
முத்தமிட்டு முத்தமிட்டு
எனை  உறிஞ்சியவை. .

விலக்கித் தனித்தபின்
வேஷம் வெளுத்து
கிழிக்கும் குரலாய்த்
தொடரும்.

சமயங்களில்
கனவின் நிலைப்படி யுடிக்கப்
பொறி  கலங்கி
வெளிநின்று
உறுமிப் போகும்

தூரம் சுருக்கிப்
புகை ஏவி
சூழனின்று சிரிக்கும்

என்  தோட்டத்து
வாய்மூடி அரும்புகளைக்
குதறிப் போகும்

நாக்குத் தள்ளிய தலைகளை
மேய்த்துக் கொண்டே ,
போகுமிடமெங்கும்
பின் தொடரும்

எட்டாதிருக்கிறேன்
எனினும்
குரல்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிந்தோடும் காலம் - ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

     சிவஞானபோதத்தின் சூத்திரங்கள் வரிசையாக நம் ஆன்மா அறியும் ஒவ்வொன்றாக சொல்லி வருகிறது. சத்து, அசத்து என்ற இரண்டினை பிரித்தறியும் அறிவை பெற...