ஞாயிறு, 22 மார்ச், 2015

குருட்டுச் சந்து


குருடாய் முடிவுற்றது சந்து
அசடு வழிந்து திரும்பினேன்

பம்பரம் சுழற்றும் பையன்கள்
சிரித்தார்கள்  லேசாக

அருகில் ஏதோ வீட்டில்
தந்தியைப்  பிரிந்து
கூர்ந்து கூர்ந்து  போய்
ஊசிமுனைப் புள்ளியுள் இறங்கி
நீடிப்பில் நிலைத்தது
கமகம்

உடல் உளைந்து
பெருமூச்சு   விட்ட  பின்
தோன்றியது:
"ரத்தம் எப்போதும்
குருட்டுச் சந்தில் சுமையிறக்கித்
திரும்ப வேண்டியதே"

கோலங்களை மிதிக்காதிருக்கக் குனிந்து
தோரணப் பச்சை
கடைக்கண்ணில்
சந்தேகமாய்ப்  பட  நடந்து
சாலையை அடைந்தேன்

எதிரே
அடர்த்தியாய் மினுமினுப்பாய்
ஒரு கல்யாண   ஊர்வலம்,
வானம் கவனிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிந்தோடும் காலம் - ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

     சிவஞானபோதத்தின் சூத்திரங்கள் வரிசையாக நம் ஆன்மா அறியும் ஒவ்வொன்றாக சொல்லி வருகிறது. சத்து, அசத்து என்ற இரண்டினை பிரித்தறியும் அறிவை பெற...