ஞாயிறு, 22 மார்ச், 2015

உளவாளிகள்


என் பிம்பங்களை
முறித்துக் குவித்துத்
தீமூட்டினாய்

மார்கழி கழிந்தது

பார்த்துக்கொண்டேயிரு

நானும் ஒருவனால்
என்னைத் திரட்டி
நின்று கொள்வேன்

ஈரவிரலை உரசி
ஈமத்தீ எழுப்புவேன்

சுற்றிலும்
முள்வேலி  சலசலத்து  நகர்ந்துவர
நானும்
முகம் இருட்டி
நடமாடுவேன்

என் பகுதிக்குக்
குரல்மாற்றம்  தந்து
உன்னுடையதெனக்
கூவித் திரிவேன்

இன்னொருனாள்
என்னிடமிருந்தும்
தப்பி
உச்சியிலிருந்து  கொண்டு
பார்ப்பேன்

இயக்கம் விலகி
நிமிஷங்கள் மட்டும் மொய்த்துக்
கிடக்கும் என் வ்ருஷங்களை
மிதித்தும்
தழுவியும்
கடித்தும்
முத்தமிட்டும்
நீ தேடித்திரிவதை
வேவு பார்பேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிந்தோடும் காலம் - ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

     சிவஞானபோதத்தின் சூத்திரங்கள் வரிசையாக நம் ஆன்மா அறியும் ஒவ்வொன்றாக சொல்லி வருகிறது. சத்து, அசத்து என்ற இரண்டினை பிரித்தறியும் அறிவை பெற...