ஞாயிறு, 22 மார்ச், 2015

யுரேகா


கள்ளிக்காடு
கட்டெறும்புகளின்  அணிவகுப்பின்  முன்
விறைத்து நின்றேன்.

முறைத்தாய்

ஊர்க்குளம்.
பாசிவிலக்கி
நீரில்
என் முகம் கிடைத்த
பெருமை தாங்காமல்
புரண்டெழுந்தேன்

சுளித்தாய்

தரையும் சுவருமற்று வீடு
உள்ளே
காற்றில் திணிந்த்திருந்த
குரல் சேகரித்து
நாவில் தடவிப் பாடினேன்;
வாயருகே வந்து
பிணவாடை கண்டாலெனத்
துணுக்குற்றாய்

அன்றைக்கு
எல்லம் துறந்து
ஆன்ம   பரிசோதனைக்காக
அமர்ந்த  தியானத்தில்
என் முதுகைக் குத்திற்று
உன்கண்.

யுரேகா சொல்லித்
தட்டுத் தடுமாறி
ஒடிய போது
கைகொட்டிக் கைகொட்டிச்
சிரித்தாய்

யார் நீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிந்தோடும் காலம் - ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

     சிவஞானபோதத்தின் சூத்திரங்கள் வரிசையாக நம் ஆன்மா அறியும் ஒவ்வொன்றாக சொல்லி வருகிறது. சத்து, அசத்து என்ற இரண்டினை பிரித்தறியும் அறிவை பெற...