வெள்ளி, 3 ஏப்ரல், 2015

கோடாரிகள் 
கண்ணுக்குப் படாத
மனித நடமாட்டம்

கோடரிகளுடன்
காட்டினுள்
வெவ்வேறு முனைகளிலிருந்து
நுழைந்திருக்க வேண்டும்

திசையெங்கும்
பாயிந்து சுழலும்
கோடாரிகள்
சரியும் மரங்களைச் சுற்றிக்
கசியும் பரிவு
(அளவான ஈரத்துடன்)

இலைடளும்
கதைகளும்
கூச்சலிட்டன

குறுக்கு நெடுக்காகக்
காடு முழுதும்
ஒலிகளின் குருட்டுப் பாய்ச்சல்
பூமிக் கடியிலான மொழி
முறிந்தது போலும்

வழக்கமாக
ரத்த வாடையைக் கொண்டுவரும்
அதே காற்று
வந்து விட்டது

விடிவதற்கு இன்னும்
நேரமிருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக