வெள்ளி, 3 ஏப்ரல், 2015

எலும்புகளின் நூலகம்


பாழடைந்த சிற்றூர் அது.

விளையாட்டாய்
ஒரு கல்லைப் பெயர்க்க
அடியில் ஊர்ந்தன
நூறு வயது
விஷப்பூச்சிகள்

வெறும்
முள்செடி விரிப்பின்மீது
வெயில் கிழிந்துக்  கொண்டிருந்தது.

எரிந்த குழந்தைகளின்
உடல் விறைப்பைப்
பார்த்துக் கொண்டிருந்தன
கரிந்த சுவர்கள்.

மொழிகளை மறந்துவிட்ட
மனசுக்குள்
தூர தூர தேசங்களின்
ரத்தம் வந்து
பாய்ந்துகொண்டிருந்தது.

விளையாட்டாய்
வீதிகளைப் புரட்டியபோது
அடியில்
நரபலி தேவதைகளின்
நடன மண்டபம்
நீச்சல் குளம்
ஆமை  முதுகு  போல் சாலை
எலும்புகளின்
மிகப்பெரிய நூலகம் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக