திங்கள், 6 ஏப்ரல், 2015

மாலை -- மாற்று`ருவம்

வீட்டு வாசலைத்
தொட்டுத் ததும்பிய மழைவெள்ளம்

முன்பொரு சமயம் கேட்ட
நள்ளிரவு ஒப்பாரிக் குரல்
கரைந்திருந்த்தது அதில்

மூழ்கினவை என
ஆளற்ற
பேச்சுக் குரல்கள்,
மழையோசையுடன் போட்டியிட்டுக்கொண்டு

நனைந்து
மாற்றுடையின்றி
மாற்றூருவமு மின்றி
இருந்தேன்.

ஓயாது தர்க்கிக்கும் தூறல்

கசங்கிக் கலைந்து கிடக்கும்
நாட்களின் குவியலிலிருந்து
எழும் புழுங்கள் வெப்பம்
இதவு

மாட்டுக் கொட்டகையிலிருந்து
சிற்றூருளை உராய்ந்துகொண்டு வரும்
பெருமூச்சு
ஆசுவாசம்

தலைப்பில்லாத ஒரு தவிப்பு
தவிப்பின் தனி இதம்
நனைந்து
மாற்று இடமில்லாதிருந்த
என் மாலையைப் பற்றிக்கொண்டு
மாற்றூருவம் இல்லாதிருந்த நான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிந்தோடும் காலம் - ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

     சிவஞானபோதத்தின் சூத்திரங்கள் வரிசையாக நம் ஆன்மா அறியும் ஒவ்வொன்றாக சொல்லி வருகிறது. சத்து, அசத்து என்ற இரண்டினை பிரித்தறியும் அறிவை பெற...