திங்கள், 6 ஏப்ரல், 2015

மாலை -- யாருமில்லா இரவு

யாருமில்லா இரவில்
நீண்டு உயர்ந்த தேக்குகள்
காட்டின் எல்லைக்குள்
நடமாடித் திரியும்

யாருமில்லா இரவுகள் அடர்ந்து
நெரிந்து கிடக்கும் கானகம்
வெளிப்பட்டுத்
தம்மைக் கண்டுகொள்ளத் துடிக்கும்
தாபங்கள்

ஆயினும்
இந்த பரபரப்பிலும்
மெல்லென
நாவுக்கடியில்
திரளும் புரளும்
என் சன்கீதம்

இந்தப் பரபரப்பிலும்
வீட்டிற்குள்
செடிகளின் பகல்  நேரப் பேச்சுகள்
இணைப்பு சுழன்று
தம் ஆதி வடிவங்களில்
திளைத்திருக்கும்

நாவுக்கடியில்
திரண்டு புரண்டு
யாருமில்லா இரவுகள்
தம் ஆதி நடமாட்டங்களோடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிந்தோடும் காலம் - ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

     சிவஞானபோதத்தின் சூத்திரங்கள் வரிசையாக நம் ஆன்மா அறியும் ஒவ்வொன்றாக சொல்லி வருகிறது. சத்து, அசத்து என்ற இரண்டினை பிரித்தறியும் அறிவை பெற...