திங்கள், 6 ஏப்ரல், 2015

மாலை -- என்மலை

வாசலில்
சிறுசிறு சந்தடிகளுடன் இசைந்து
வெளிச்சம் குறைந்துகொண்டுவரும்

தொடுதல்களைக்
கணக்கிட்டுக்கொண்டிருக்கும் இருப்பு
மங்கியும் தெளிந்தும்
ஒரு நிலைடற்று இருக்கும்

வெளியேறத் துடிப்பேன்

ஆனால் எப்படி?

கதவு சுவர் கூரை எல்லாம்
வெளியேறி  மறைந்து   போயிருக்கும்

வெளியேறுதல்
இல்லை என்று ஆனபின்
எனக்காகக் காத்திருந்த என்மலை
சற்று அசைந்து
குவடுகளால்
எனதொரு எல்லையை வருடும்

இங்கே படரும் இருளைச்
சிறிது சுண்டினால் கூட
என்மலை எனக்குப் பதில்சைகை தரும்

என்னைச் சுற்றி நிரம்பும்
காட்டுக் களிப்பு

இருப்பின் அனிச்சய பாவத்தில்
இது எது ஒரு சுகம்,
கண்பார்க்க எட்டித் திரியும்
ஞாபகம்போல்.

00

இப்படித்தான் என்று
நிதானமாகப்
பிறந்துகொண்டிருப்பேன்
எனது மலை  வேரின்
ஒரு சிறு நுனியிலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீ எனும் தற்சுட்டு: அபி கவிதைகள் – இசை (தமிழினி)

நேர்காணல் ஒன்றில், “உங்கள் கவிதைகளை அணுகுவதற்கு எந்த விதமான தயாரிப்புகள் தேவை? “ என்று கேட்கப்படுகிறது அபியிடம். அதற்கு அவர், “வேண்டுமா...