திங்கள், 6 ஏப்ரல், 2015

மாலை -- பாறைப் பிரதேசம்

மாலை சர்சவென
நுழைந்து கொள்கிறது

கனலும் எனது
அனைத்துத் தரைகளையும்
பனிப்புகை செலுத்திக்
குளிர்விக்கிறது

எங்கே போயினர்
வீட்டு மனிதர்கள்?
தேடவும் தோன்றவில்லை

எனது பாறைப் பிரதேசத்துடன்
தனித்து நான்

மலைக்குவடுகள்
குனிந்து கீழே இறங்க,
சாலையோரக் குழிகள்
குழியினின்றும் வெளியேற--

இதுவே
பதற்றம் தணிக்கும் பரவசம்

இதோ
பிறை    பிறந்ததும்
எங்கெங்கிருந்தோ     ததும்பி
வெள்ளம்
எனது பாறைப்   பிரதேசத்தை
மூழ்கடிக்க இருக்கிறது

பிரதேசம் எதுவுமின்றி
நான் சூழ்ந்து நான்

இனி
இருக்கிறேன் என்பதில்லாத இருப்பு
இல்லை என்று
இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிந்தோடும் காலம் - ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

     சிவஞானபோதத்தின் சூத்திரங்கள் வரிசையாக நம் ஆன்மா அறியும் ஒவ்வொன்றாக சொல்லி வருகிறது. சத்து, அசத்து என்ற இரண்டினை பிரித்தறியும் அறிவை பெற...