வெள்ளி, 3 ஏப்ரல், 2015

நானும் இந்த கவிதையும்

நானும் இந்த கவிதையும்
நன்பர்களே அல்ல
அப்படித் தோன்றக் கூடும்

செர்ந்திருப்பதும்
ஒரே மூச்சைப்
பகிர்ந்து சுவசிப்பதும்
விஷயங்களிலிருந்து
வெளியேறி வெளியேறிக்
கலைவதும் காரணமாக
அப்படித் தோன்றலாம்

இந்தக் கவிதை
ரொம்பவும் எளிமையானது
ஒன்றும் சொல்லதிருக்கிற--
ஒன்றும் இல்லாதிருக்கிற
எளிமை

எனது எளிமையோ
இல்லாமையின் இருப்பை,
சொல்லமையின் சொல்லைச்
சுமந்து திரிவது

எனக்கு
நுழையவும் வெளியேறவும்
வாசல்கள் இருக்கின்றன

இந்தக் கவிதைக்கு மட்டும்
எல்லாச் சுவர்களும்
திறந்து மூடித் தருவன

எனது தோழர்கள்
என் சூழலின்  விழிம்புகளைத்
தொற்றி  ஏறி
விரைகிறார்கள்
எனது பிரதேசப் பகல் நிலைங்களின் ஊடாக

இதன் தோழர்கள்
பிரயாணமற்ற இதனை
விட்டுப் போனவர்களுமில்லை
சுற்றிக் கிடப்பவர்களுமில்லை

நானும் இந்தக் கவிதையும்
நண்பர்களே அல்ல
அப்படித் தோன்றக் கூடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக